Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, 14 February 2010

இந்த வாரம் பார்த்த படங்கள்

இந்த வார இறுதியில் பெரிதாய் வேற ஒன்னும் வேலை இல்லை என்பதாலும், நான் பார்க்க வேண்டும் என்று டவுன்லோட் செய்த படங்களின் எண்ணிக்கை கூடிக கொண்டே போவதாலும் (நான் இருக்க எடத்துல  இந்திய படங்கள் திரையிட படுவதில்லை. இன்னும் ஒரு காரணம் கூடிய சிக்கிரம் இந்தியா வர வேண்டும் என்று முயன்று கொண்டு இருப்பதற்கு.:) )

சரி பார்த்த படங்கள் பற்றிய என் கருத்து. விமர்சனம் இல்லை மக்கா. வெறும் கருத்து.

முதல பார்த்த படம் அசல். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தான் பார்க்க ஆரம்பிதேன். நான் மசாலா படம் பார்த்து ரெம்ப நாள் ஆகியிருந்ததாலும், அஜித்தின் சமீபத்திய பேச்சுக்கள் எனக்கு பிடித்து இருந்ததாலும்,அசல் பார்க்க முடிவெடுத்தேன். சரி நேர படத்துக்கு போவோம். என்ன தான் எதிர்பார்ப்பே இல்லை என்றாலும், அஜித்-சரண் கூட்டணி இன்னும் கொஞ்சம் நல்ல படத்த தந்து இருக்கலாமுன்னு நினைக்குறேன். படம் தமிழ் நாட்டை தவிர உலகில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஏனோ தனியாய் கேட்ட பொழுது பிடித்த பாடல்கள், படத்தில் பிடிக்கவில்லை. மசாலா படத்தில் பாடல் படத்தோடு ஓட்டும் என்று எதிர்பார்க்க கூடாது தான், ஆனால் பாடல்களில், ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டாமா? தல, நீங்க இளைய தளபதிய பார்த்து கத்துக்க வேண்டியது நிறைய  இருக்கு. படம் பில்லா-வை அடிக்கடி  ஞாபகம் படுத்தியது, கடியாய் இருந்தது. அஜித்தை தவிர படத்தில் யாருக்கும் நடிக்க வாய்ப்பு கிடையாது. அடுத்த தடவ இன்னொரு மசாலா படம்னு விமர்சனம் படித்தால், நான்  அஜித் படம்  பார்க்க மாட்டேன்னு நினைகிறேன். அட வெறும் மசாலா தான, அப்போ புது நடிகர்கள் படம் பார்போம்மே, புதுசா ஏதாவது இருக்கும். எதுக்கு அஜித்?

வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது. பல இடங்களில் படத்த fast forward செய்ய முடிந்தது. அசலில் அசலா எதுவும் இல்லை .





ரெண்டாவது படம், தமிழ்ப்படம்,கலக்கிட்டாங்க மக்கா. விழுந்து விழுந்து சிரிச்சேன். இத்தனைக்கும் எனக்கு "லொள்ளு சபா" ரெம்ப பிடிக்காது.
சிவா சரியான தேர்வு. கதை, திரைக்கதை எல்லாமே சூப்பர். எத்தன நாள் ஆச்சு இப்படி சிரிச்சு?  விசு படம் பார்த்தப்போ சிரிச்சது, வடிவேலு-வின் புலிகேசிக்கு சிரிச்சது. கண்டிப்பா நான் இந்தியா வரப்போ என் அப்பா அம்மாவோட  இந்த படம் பார்ப்பேன். இப்படி படம் எடுங்களேன் இயக்குனர்களே, வீட்டுல எல்லாரும் ரசிச்சு, படத்த பத்தி ஒரு ரெண்டு மூனு நாள் பேசி, படம் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக வேண்டும். 2010 பத்தி, அஞ்சு வருஷம் கழிச்சு பேசுனா, இந்த படம் அதில் ஒரு பகுதியா இருக்கும். படத்தின் வசனம் எழுதிய நண்பர் வலைப்பக்கம் இதோ.


வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது. பல இடங்களில் படத்த rewind/repeat செய்ய முடிந்தது என் படுக்கையில் உருண்டு புரண்டு  வாய் விட்டு சிரித்து, அழுகை வர சிரித்து, என் கன்னட roommates என்னை ஒரு மாதிரியாய் பார்க்கும் அளவுக்கு படத்தை ரசிக்க முடிந்தது. 

தமிழ் படம். திகட்டாத நகைச்சுவை.




அடுத்து பார்த்த படம், ஆயிரத்தில் ஒருவன். விமர்சனகளில் பின்னுட்டம் இட்ட பொழுது,  நான் இது மாதிரி புது முயற்சிகளை ஆதரிக்கனும்னு சொன்னேன். தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு எண்ணம் இப்போ. படம் எனக்கு புரிஞ்சுது. (அல்லது நான் அப்படி தான் நினைக்கிறேன்௦). அவதாரோட இதை ஒப்பிட முடியாது, ஒப்பிட கூடாது. ஆனால் இது தான் நம்மை உலக சினிமாவுக்கு எடுத்து செல்லும் முயற்சியா? இன்னும் பத்து வருடம் கழித்து இப்படிப்பட்ட சினிமாவை தான் நாம் பார்க்க விரும்புகிறோமா?  அன்பே சிவம்,சேது, ரோஜா, மொழி, பாம்பே, இந்தியன் இந்த படங்கள் எல்லாமே என்னை பொறுத்தவரை பல உலக படங்களுடன் அவற்றை ஒப்பிட வைத்தன. அய்யா செல்வா ராகவன், உலக சினிமாவுக்கு கொண்டு செல்றதுன்னா, உடனே படம் முழுக்க கெட்ட வார்த்தையும், 'Skin Show'um இல்லை. உலகம் நம்மட்ட  என்ன இருக்குனு பார்க்க விரும்புதே தவிர, அவங்கள மாதிரி படம் எடுக்க சொல்லல. நல்ல கதை இது. இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு திரைகதை எழுதி, தேவை இல்லாத செக்ஸ்ச விட்டுட்டு (சில இடங்களில் தேவைனா சரி, பார்த்திபனை மயக்க செக்ஸ் தேவை தான், ஆனா கார்த்தி கூட தேவையே இல்லாத உரையாடல்களை தவிர்க்கலாம்). உங்க வட்டத்த விட்டு வெளிய வாங்க செல்வா. செக்ஸ் இல்லாம ஒரு படம் எடுங்களேன் ப்ளீஸ்.


வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது. பல இடங்களில் படத்த freeze செய்து  secreenshot எடுக்க செய்ய முடிந்தது ஹி ஹி. :)


ஆயிரத்தில் ஒருவன். மிஸ் பண்ணிடிங்களே செல்வா.


கடைசியா பார்த்தது "My Name is Khan".ஹிந்தி படம். ஷாருக்கும், இயக்குனர் கரணும், ரெம்ப தெளிவா யார் மனதையும் புண்படுத்தாமல் அழகாய் சொல்ல வந்த விசயத்த சொல்லிருக்காங்க.

9/11 2001-kku பிறகு அமெரிக்காவில் வாழும் ஒரு முஸ்லிமின் கதை. ஓரே ஒரு வசனத்தை சுற்றி படம் ஓடுகிறது. "My name is khan and I am not a terrorist". ரெம்ப சிக்கலான கதை. ஒரு நுனி தவறினாலும், ஏதாவது ஒரு சமுகம் ஆத்திரம் அடைந்து விடும். "பாம்பே"யின் சாயல் பல இடங்களில்.  படத்தில் எல்லாருமே அழகாய் நடித்து இருக்கிறார்கள். ஷாருக் நடிப்பு தனியாய் பாராட்டப்பட வேண்டியது. படத்தோட அஸ்திவாரமே கதை தான்.அதனால அத பத்தி நான் பேச மாட்டேன். பின்னணி இசை பிரமாதம். கேமரா உண்மையான அமெரிக்காவை கவர் செய்து இருக்கு. ஒபமாவாய் நடித்தவர் அவரை நல்லாவே இமிட்டே செய்றார். போர் அடிக்காத திரைக்கதை, நம்ம தமிழ் ஆளுங்க நிறைய பேர் இந்த படத்துல இருந்து நிறைய கத்துக்கலாம். பதிவர்களே, நம்ம பர்தா பற்றிய விவாதம் எல்லாம் படத்துல வருது. இந்த படம் கண்டிப்பாய் எல்லாரும் பார்க்க வேண்டிய ஒன்று.

படம் பார்த்த உடன, நான் போட்ட டுவிட் இது:


@iamsrk @kjohar25 #MNIK.vry gd movie.cant come out of movie, hrs after seeing it.I am Senthil and i am proud to have friends with name 'Khan'


My Name is Khan. Don't ever miss it, especially if your name is not Khan.:) அப்புறம் நீங்க  இந்த  படம் பத்தி என்ன சொல்ல்றாங்கனு கேட்க ஆர்வம்மா இருக்கேன். யாராவாது படம் பார்த்து இருந்தா உங்க கருத்த சொல்லுங்களேன். 


வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது அப்படின்னு சொல்ல மாட்டேன். இந்த படத்த நான் தியேட்டர்ல பார்த்து இருக்கனும். மிஸ் பண்ணிட்டேன்.  :(


Saturday, 6 February 2010

ஆஸ்கார் - போட்டியில் இருக்கும் இந்தி(ய) படம்

இந்த வருட ஆஸ்கார் பேச்சுக்கள்  எல்லாம் "அவதார்" பற்றி பேசி கொண்டிருக்க, சத்தம் இல்லாமல் ஒரு ஹிந்தி படம் ஆஸ்கார் கடைசி சுற்றியில் விளையாடி கொண்டிருக்கிறது. படம் பெயர் "கவி" . புது செய்தியா இருக்கா? எனக்கும் இன்னைக்கு தான் தெரியும்.. இந்த படம் இந்தியாவில் நடக்கும் அடிமைத்தனம் பற்றிய படம்.. பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்ல தான். ஆனால் நம்முடைய பிரச்சனைகளை பற்றி பேச மறுப்பதும் ஞாயம் இல்லை தானே.
"Short Flim" - Live actions பிரிவில் வருது. மொத்தமே பதினேழு நிமிடம் தான்..படத்தில் திரைக்கு பின்னால் வேலை பார்த்த யாரும் இந்தியராய் தெரியவில்லை..

ஆதி, வாய்ப்ப தவற விட்டுடிங்களே.. இந்த குறும்படத்த நீங்க அனுப்பி இருக்கனும்...ஹி ஹி

படத்தின் முன்னோட்டம் (இந்த வார்த்தையை உபயோகித்து எத்தன வருஷம் ஆச்சு....கடைசியா தூர்தர்ஷனில் இந்த நிகழ்ச்சி வந்த பொழுது உபயோகித்தது)


Kavi (www.KaviTheMovie.com) from Gregg Helvey on Vimeo.

Sunday, 27 December 2009

3 இடியட்ஸ் - பட அறிமுகம்



அவதார் பார்த்து அதிர்த்து போனதுக்கு அப்புறம் "3 Idiots" பார்க்க நண்பர்களுடன் திரை அரங்கம் சென்றேன். அமீர் கானின் "Tare Zameen Par" அப்புறம் அவர் மேல ஒரு தனி மதிப்பு  உண்டு. (கமல்-ட்ட இருக்க மாதிரி ). நீங்க  "Tare Zameen Par" பார்க்கலைன்னா கண்டிப்பா பாருங்க. எனக்கு பெருசா ஹிந்தி தெரியாது. ஏதோ அப்பா அடிப்பாரேன்னு பயத்துல சின்ன வயசுல படிச்சது...அவ்ளோ தான்... நண்பர்களின் மொழிமாற்ற உதவியுடன் தான் படம் பார்த்தேன்.

ஒரு கல்லூரி கதை. சின்னதாய் உங்களுக்குள் நம்பிக்கை துளிர் விட வைக்கும் படம். படத்தின் கதையை சொல்வதாய் இல்லை. :) நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அமிரின் நடிப்பு எப்பொழுதும் போல் சூப்பர். மிச்சவங்க அவங்க அவங்க வேலைய ஒழுங்கா பார்த்திருக்காங்க. நம்முரு மாதவனும் அசத்தி இருக்கார். பாடல்கள் தாளம் போட வைத்தன. பின்னணி இசை படத்தை பாதிக்காமல் சென்றது. படத்தின் முக்கியமான விஷயம் நகைச்சுவை. (இதற்காகவே  கண்டிப்பாக ஹிந்தி தெரிந்தவர் வேண்டும்,...அங்க தான இடிக்குது அப்படின்னு சொல்லறது கேக்குது..). தமிழில் இந்த படம் வெளியிட பட்டதா?

எனக்கு சினிமா மொழி தெரியாது. அதனால ஒலி,ஒளி பத்தி எல்லாம் கேக்காதிங்க. :)
ஒரு ரசிகனாக  படம் புடிச்சுது. அமிரோட முந்தின படங்கள் அளவுக்கு இல்லைன்னு தான் சொல்லணும். ஒரு சில லாஜிக் சொதப்பல்கள், திரைகதையில் சில இடங்களில் தொய்வு. அமிரை நிறையவே முன்னிறுத்தி விட்டது போன்ற உணர்வு. (நம்ம ஊரு கதாநாயகர்கள் அளவுக்கு இல்லை என்றாலும்..)

"ஆல் இஸ் வெள்" என்பது தான் பஞ்ச் டயலாக். முன்னாபாய் இயக்குனரின் படம் இது. பல இடங்களில் அது தெளிவாய் தெரிகிறது. மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பது படத்தின் கருத்து. நான் கூட ஆடிட்டர் ஆகனும்னு நெனச்சு கடைசில சாப்ட்வேர் துறைல குப்ப கொட்டிக்கிட்டு இருக்கேன். அதனால படம் ஒரு வகைல என் மனதை நேரடியா தொட்டது. சேரன் மாதிரியான இயக்குனர்கள் கொஞ்சம் இந்த மாதிரி படங்களை பார்த்தால் நல்லது. (சேரனை எனக்கு பிடிக்கும். அதனால தான் இந்த கமெண்ட். அவர் நம்மள ரெம்ப அழுக வைக்குற மாதிரி ஒரு எண்ணம். இந்த படம் சிரிக்க வைத்து கொண்டே கருத்து சொல்லுகிறது).

அவதார் பார்த்த பொழுது பிரமிப்பு மிஞ்சியது.  "த்ரீ இடியட்ஸ்"  பார்த்த பொழுது ஒரு புன்னகையுடன் நம் சமுகத்தின் மேல் வெறுப்பு வந்தது  (அந்த சமுகத்தில் நானும் அடக்கம் என்பதை உணரும் போது வெறுப்பு இன்னும் அதிகம் ஆகியது).

பின் குறிப்பு: விமர்சனம் என்ற வார்த்தை வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டுள்ளது.  சம்பிபதில் விமர்சனம் செய்ய ஒரு தகுதி வேண்டும் என்று எங்கோ படித்ததின் விளைவு.

Sunday, 22 March 2009

Online Cinema

Have you ever wanted to see a good cinema, but didnt have any theaters playing it nearby? Finally ended up watching in some website with bad quality? Or if the quality was good, had a guilty feeling that you have to pay back to producers who produced a nice movie and was wondering what is their paypal id? I have sometimes. Now you can watch movies online with very good quality and pay them as well.

www.onlycinema.com

Give a try!!!

Sunday, 22 February 2009

Osacr-il தமிழ்

We indians always had the best entertainment industry in the world, but rarely got noticed. We had the best actors, musicians, lyrics writers, dialogues, story writers last but the not the least directors. But we never got appreciation from rest of the world.

So today when A.R.Rahman won the award, he broke that history and gave a hope to all of us that in the years to come, we will be noticed more. Thanks and Congrats ARR. I was so happy to hear the world chennai in the oscar stage and in top of all, when he said "Ella pugallaum irraivanukae" in Tamil, i was stunned without words.

There are no parallels in this generation to compare his achievements. I can try to imagine few people coming somewhere near to him like Vishawanathan Anand, Paes/Bhupathi or like Tata/Ambani/NRN/Premji. But none can reach him. How can you give some music which everyone in the world loves.

"Hats off A.R.Rahman"

எல்லா புகழும் இறைவனுக்கே

Sunday, 15 February 2009

Nan Kadavul - Movie review

நான் கடவுள் - பாலாவின் புது படம். மூன்று வருட உழைப்பு. மிக அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். உங்களுக்கு படம் பிடிகிறதோ இல்லையோ, எப்படி ரஜினி படம் பார்கிறோமோ,அது மாதிரி கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.

ஆர்யா-வையும் பூஜா-வையும் தவிர மற்றவர்கள் எல்லாரும் சினிமாவுக்கு புதுசு. ஆனால் நடிப்பில் ஒரு குறை கிடையாது. அதில் தெரியுது பாலாவின் திறமை. கதை ஒன்றும் பெரிய கதை கிடையாது. ஒரு சிறுகதை. ஆனால் பாலாவின் இயக்கத்தில் மிக அற்புதமா வந்திருக்கு. படத்தில் மசாலா கிடையாது. பெரிய heroism கிடையாது. படத்தில் உங்களை தேட வேண்டாம். படத்தை பார்த்த பின் படத்தில் உள்ள எந்த கதாபாத்திரமாகவும் மாற எண்ணமாட்டிர்கள் . எனவே படத்தை பற்றி ஒரு முறை அறிந்து கொண்டு போவது உசிதம். There is no character which you can relate to yourself and there is no heroism which would inspire you.

படத்தின் கதை பற்றி நான் ஒன்றும் சொல்வதாக இல்லை. எனவே மற்ற துறைகளை பார்போமா:

இசை : ராஜா படம் முழுக்க ஆதிக்கம் செல்லுத்துகிறார். பாலா போல ராஜாவுக்கும் இது ஒரு மைல் கல். இசை தட்டில் இருந்த ஒரு சில பாடல்களை படத்தில் காணவில்லை.

http://www.youtube.com/watch?v=cjNbQHYRV2k&feature=PlayList&p=E1595B0938640E57&index=0
வாலியின் வரிகளில் வலி அதிகம்.

கேமரா: மிக அருமையாக ஆர்யாவிடம் விளையாடுகிறது. மற்ற இடங்களில் பரவாயில்லை ரகம். காசியை இன்னும் அருமையாக காட்டி இருக்கலாம்.
வசனம்: சின்ன சின்ன ஆனால் முள்ளாக குத்தும் வசனங்கள் . தாய்யையும் விமர்சிக்கும் வசனங்கள்.
நடிப்பு: படத்தில் எல்லாரும் பிரமாதமாய் நடித்திருக்கிறார்கள். ௧00% (100%) தங்கள் திறமையை வெளிபடுத்தி இருக்கிறார்கள். வில்லன்கள் உட்பட.

குறை:
குறை ஒன்றும் இல்லை என்று சொல்ல நினைத்தாலும் , ஒரு சிலவற்றை இன்னும் நன்றாக செய்திருக்கலாம். படம் இன்னும் முடியவில்லையோ என்ற எண்ணம் உள்ளது. காசியில் ஆர்யாவின் ௧௪ (14) வருட வாழ்கையை இன்னும் கொஞ்சம் காட்டி இருக்கலாம். பாடல்கள் கதையுடன் வெகுவாக ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது. பாலா U/A வாங்க படத்தை சிறிது சுருக்கி விட்டதாக சொல்கிறார்கள். உண்மையா பாலா?

மொத்தத்தில் ௪.௫/௫ ( 4.5/5).

A historic flim which is a milestone in tamil movie industry and will be a milestone with everyone associated with it. Hats off Bala.

Saturday, 14 June 2008

Dasavatharam

I am sitting now in a Biggby coffee shop opposite to the Novi theater where i saw Dasavatharam. My first reaction: Good. (Not a Wow you know).

So here goes my first movie review:

I wont reveal the plot, but i am telling you, there is very little to reveal. Kamal has tried to give a movie which is not a complete comedy like his panchanthanthram and also not every serious like Indian. But he failed to strike a balance and it turns out to be half cooked. (Scientific explanations makes you think it to be like "vikram" , his old movie, but bullets curing the cancer makes you to believe that he didnt want to give a logical moie).

Technology is used to the maximum extent. Too much of spending in that front which sometimes amazes you. Poor producer (Hope he really doesnt become poor and the movie gets him some money). At times, Camera moves at 80 miles/hour.

Music is good. Really doubt whether Himesh did all of them. "Mukundha Mukundha" is the one i remember after coming out the movie. Lyrics are classic. Vairamuthu and Valli have given their best. But i liked the lyrics in the song where the punjabi kamal performs in the stage.Background music might have been better. It fails to impress you. It fails to run with the fast camera.

Hats off to kamal. All his ten characters score. But sometimes you get bored of seeing him. Every character you see in the screen, you will try to figure out whether it is kamal. He scores there. He makes you believe that he can do any role.

Other actors just occupy the screen, they have very little role to play. Nagesh,Napolean everyone is used as a pickle in a Kamal lunch. :)

A strong story might have made me say "Wow". Overall Movie is just above ok. I really think there is no need for kamal doing 10 roles and he introduced a lot of roles just to make that count to 10. (To beat Shivaji's 9 role record) Just remembers the tamil proverb "Allauku Minchinal Audhamum Nanchu". This is definitely above any normal movie that you will see in Kollywood, but kamal should have done it better. Kamal as a actor wins your heart, but he fails (may be i shud say he didnt succeed) as a screenplay writer.

Overall if you go to the theater without expectations : 3/5
You went to theater to expect a "ullaga nayagan" movie : 2/5

Sorry Kamal.Better luck next time.