Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Thursday, 8 April 2010

ஐபோனில் தமிழ்!!

ஐபோன் பயன்படுத்தி இருந்தீர்கள் என்றால், அதில் தமிழ் வாசிப்பது மிகவும் கடினம் (பிச்சு போட்ட ஜிலேபி மாதிரி) என்பது உங்களுக்கு தெரியும். இது வரை அதற்கு இருக்கும் ஒரே பதில் செல்லினம் என்னும் ஐபோன் மென்பொருள் மட்டுமே.


படம் உதவி: http://sellinam.com/


சரி!! செல்லினத்தில் தான் தமிழ் படிக்க முடியுமே அப்புறம் எதற்கு இந்த பதிவு என்று யோசிக்கிறிங்க போல? பொறுமை. பொறுமை இணையத்தினும்  பெரிது. :-)

செல்லினத்தில் ஒரு வலைதளத்தை படிக்க, அந்த தளத்தின் RSS ஓடையை கொடுக்க வேண்டும்.

உங்கள் வலைத்தளம் ப்ளொக்கரில் இருந்தால், உங்கள் RSS ஓடை
http://blogname.blogspot.com/feeds/posts/default?alt=rss
blogname என்பதற்கு பதில் உங்கள் வலைதள முகவரி இருக்க வேண்டும்.

இப்படி நீங்கள் வாசிக்கும் எல்லா வலைதலங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக இதில் இணைத்து வாசிக்கலாம். 


ஆனால் என்னை மாதிரி பல வலைப்பூக்களை தொடர்பவர்கள், ஒன்றன் பின் ஒன்றாக எல்லாவறையும் இணைத்து, அப்புறம் புதிதாக ஏதாவது பதிவு வந்திருக்கான்னு நொடிக்கு ஒரு தடவ பார்த்துகிட்டு, நடக்குற காரியமா? அதனால் பல நாட்கள் இந்த மென்பொருளை நான் உபயோகபடுத்தவில்லை. அப்புறம் ஒரு நாள் நானே உக்கார்ந்து யோசிச்சேன். என் "கூகிள் ரீடர்" நான் தொடரும் வலைப்பூக்களில் வரும் புதிய பதிவுகளை தொகுத்து தருகிறது. அப்படி என்றால் என் "கூகிள் ரீடர்"யின் வெளியிடை ஒரு RSS ஓடையாக  கொண்டு வர முடியும் எனில், அந்த ஒரு RSS ஓடையை மட்டும் செல்லினத்தில் இணைத்து விட்டால் போதும், நான் தொடரும் அத்தனை தளங்களும் செல்லினத்தில். :-)

It will be a mobile version of my google reader. :-)

சொல்வது எளிது. ஆனால் செயல்பட ஆரம்பித்த பின் தான் அதில் உள்ள கடினங்கள் புரிந்தன.

முதலில் "கூகிள் ரீடர்"யின் வெளியிடை ஓடையாக மாற்றுவது எப்படி?

இதற்க்கு நீங்கள் முதலில் நீங்கள் வாசிக்க நினைக்கும் வலைத்தளங்களை ஒரு மூட்டையாக கட்ட வேண்டும். கிழே உள்ள படத்தை பாருங்கள்.

இதில் உள்ள "create a bundle" என்பதை தேர்தெடுத்து மூட்டை கட்டுங்கள். பின் அந்த மூட்டை ஒரு கோப்பாக வரும். அந்த கோப்பை தேர்ந்தெடுத்து விட்டு, வலது பக்கம் மேலே "show details" சுட்டியை சொடுக்கினால், கீழ் உள்ள படத்தில் உள்ள படி உங்கள் "ATOM FEED" தெரியும். இது 'atom' ஊட்டம், இதை RSS-ஆக மாற்றினால் தான் செல்லினத்தில் படிக்க முடியும்.



எனவே உங்கள் atom ஊட்டத்தை நகல் எடுத்து கொண்டு, www.feedburner.com சென்று உங்கள் கூகிள் கணக்கின் முலமாக உள்சென்று, மேலே நகல் எடுத்த சுட்டியை ஓட்டினால், ஒரு சில கேள்விகளுக்கு பின், அது உங்களுக்கு ஒரு புது சுட்டி தரும்.




மேலே உள்ள "Feed Address"சை நகல் எடுத்து உங்கள் கைபேசியில் செல்லினத்தில் சென்று புது உட்டமாக கொடுத்து விட்டால், பின் உங்கள் பதிவுகள் அனைத்தும் அழகு தமிழில் உடைந்த ஜிலேபிகளாக இல்லாமல் படிக்கலாம்.

நான் கூறியதில் ஏதேனும் விடுபட்டு போயிருப்பின் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும். ஏதேனும் புரியவில்லை என்றாலும் பின்னுட்டத்தில் கேளுங்கள்.

நான் தொடரும் தளங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், http://feeds.feedburner.com/senthilfollows சுட்டியை உபயோகித்து கொள்ளுங்கள்.

இன்னொரு உதவி. கீழ் உள்ள ஆப்பிள் தளத்திற்கு சென்று தமிழ் சரியாய் தெரியவில்லை, என்ற குறையை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
http://www.apple.com/feedback/iphone.html

Monday, 30 November 2009

ஆறாம் உணர்வு!!

முதல எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகிறேன். நீங்க கீழ படிக்கிறது பத்தி உங்களுக்கு முன்னமே தெரியும்னா, "போடா போடா பொழச்சு போடா-னு" விட்டுருங்க. உங்களுக்கு இது புது செய்தினா, எனக்கு சந்தோசம். எப்படினாலும் ஒரு கருத்து சொல்லிட்டு போங்க.

சரி இடுகைக்கு வருவோம். முதல TED பற்றி ஒரு அறிமுகம்.

TED என்பது ஒரு லாப நோக்கு இல்லாத ஒரு நிறுவனம். TED எனபது டெக்னாலஜி (தொழிநுட்பம்), என்டர்டைன்மென்ட்(பொழுதுபோக்கு), டிசைன்(வடிவமை) என்பதின் சுருக்கம். உலகம் முழுதும் இந்த மூணு துறைகள்ல இருக்க அறிஞர்கள ஒரு இடத்துல கொண்டு வந்து அவங்களோட கருத்துக்கள பகிர்ந்து கொள்ள ஒரு மேடை ஏற்படுத்தி கொடுக்குறாங்க.

இந்த வருடம் முதல் முறையா இந்தியா-ல இந்த கருத்தரங்கு மைசூர்-ல நடைபெற்றது. தெற்கு ஆசியா-வின் முன்னேற்றம் தான் கருத்தரங்கின் முக்கிய பார்வை. எங்க நிறுவனத்தின் முன்னாள்(?) தலைவர் கூட இந்தியா முன்னேற என்ன செயனும்னு பேசினார். அந்த சுட்டி இங்க. நல்ல பேச்சு. ஆனா நெறைய பேரால இதே மாதிரி பேச முடியுமே.

இது போல, ஒரு தொழிநுட்ப பேச்சா தான் எல்லாரும் "ஆறாம் உணர்வை"யும் நெனச்சாங்க.ஆனா இத பிரணவ் மிஸ்ரா பேசி முடிஞ்ச உடன அரங்கமே எழுந்து நின்றது. பேச்சோட சுருக்கம் என்னன்னா "நீங்க உங்க நிஜ உலகம் வேற, டிஜிட்டல் உலகம் வேற, அப்படி தான நினைகுறிங்க? அந்த வித்தியாசத்த இல்லாம பண்றது தான்" ப்ரனவோட புது யுத்தி. உங்க கைல சின்ன sensora மாட்டி விட்டுற வேண்டியது. இது நீங்க என்ன செயனும்னு நெனைச்சாலும் அத செய்யும். போட்டோ எடுக்கனுமா நம்ம ஊரு டைரக்டர் கைய தூக்குற மாதிரி தூக்க வேண்டியது தான்.


போன் பேசனுமா? உங்க கைல இருக்குற (இல்லாத) ஒரு சின்ன keypadla தட்டச்சு செய வேண்டியது தான்.




சரி சரி, நான் சொன்னா நம்ப மாட்டிங்க. நீங்களே பாருங்களேன். சுட்டி இங்க.

பிரணவ் மிஸ்ட்ரி-யின் வலைப்பக்கம் http://www.pranavmistry.com/

பிரணவ பார்த்தா பெருமையாவும் பொறாமையாவும் இருக்கு.

பிரணவ ரெண்டு விஷயத்துக்காக தனியா பாராட்டனும்.

1. இந்தியா தனக்கு நெறைய கத்து குடுத்தத பெருமையா ஒதுக்குறதுக்கு. M.I.T  தான் காரணம்னு சொல்லறது ரெம்ப ஈசியா இருந்துருக்கும்.
2. இத திறமூலம் (Open Source-a) ஆக்க போறதா சொன்னது.

நைட் ஷ்யாமளன் குடுத்த "Sixth Sense" மாதிரி இந்த "ஆறாம் உணர்வும்" ஒரு பெரிய விஷயம்.

இது ஒரு பெரிய உருவாக்கம். (Invention-ku தமிழ் வார்த்த உருவாக்கமா இல்ல கண்டுபுடிப்பா? Discovery தான கண்டுபிடிப்பு?)

பிரணவ் , உங்களுக்கு பெரிய சல்யுட். 

இது வரைக்கும் பொறுமையா படிச்சதுக்கு நன்றி.  TED பத்தி இன்னும் நெறைய எழுதலாம்னு இருக்கேன். மக்கா, என்ன சொல்லறிங்க?

புடிச்சிருந்தா ஒரு வோட்டு போட்டுட்டு போங்களேன்.