Sunday 27 December 2009

3 இடியட்ஸ் - பட அறிமுகம்அவதார் பார்த்து அதிர்த்து போனதுக்கு அப்புறம் "3 Idiots" பார்க்க நண்பர்களுடன் திரை அரங்கம் சென்றேன். அமீர் கானின் "Tare Zameen Par" அப்புறம் அவர் மேல ஒரு தனி மதிப்பு  உண்டு. (கமல்-ட்ட இருக்க மாதிரி ). நீங்க  "Tare Zameen Par" பார்க்கலைன்னா கண்டிப்பா பாருங்க. எனக்கு பெருசா ஹிந்தி தெரியாது. ஏதோ அப்பா அடிப்பாரேன்னு பயத்துல சின்ன வயசுல படிச்சது...அவ்ளோ தான்... நண்பர்களின் மொழிமாற்ற உதவியுடன் தான் படம் பார்த்தேன்.

ஒரு கல்லூரி கதை. சின்னதாய் உங்களுக்குள் நம்பிக்கை துளிர் விட வைக்கும் படம். படத்தின் கதையை சொல்வதாய் இல்லை. :) நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அமிரின் நடிப்பு எப்பொழுதும் போல் சூப்பர். மிச்சவங்க அவங்க அவங்க வேலைய ஒழுங்கா பார்த்திருக்காங்க. நம்முரு மாதவனும் அசத்தி இருக்கார். பாடல்கள் தாளம் போட வைத்தன. பின்னணி இசை படத்தை பாதிக்காமல் சென்றது. படத்தின் முக்கியமான விஷயம் நகைச்சுவை. (இதற்காகவே  கண்டிப்பாக ஹிந்தி தெரிந்தவர் வேண்டும்,...அங்க தான இடிக்குது அப்படின்னு சொல்லறது கேக்குது..). தமிழில் இந்த படம் வெளியிட பட்டதா?

எனக்கு சினிமா மொழி தெரியாது. அதனால ஒலி,ஒளி பத்தி எல்லாம் கேக்காதிங்க. :)
ஒரு ரசிகனாக  படம் புடிச்சுது. அமிரோட முந்தின படங்கள் அளவுக்கு இல்லைன்னு தான் சொல்லணும். ஒரு சில லாஜிக் சொதப்பல்கள், திரைகதையில் சில இடங்களில் தொய்வு. அமிரை நிறையவே முன்னிறுத்தி விட்டது போன்ற உணர்வு. (நம்ம ஊரு கதாநாயகர்கள் அளவுக்கு இல்லை என்றாலும்..)

"ஆல் இஸ் வெள்" என்பது தான் பஞ்ச் டயலாக். முன்னாபாய் இயக்குனரின் படம் இது. பல இடங்களில் அது தெளிவாய் தெரிகிறது. மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பது படத்தின் கருத்து. நான் கூட ஆடிட்டர் ஆகனும்னு நெனச்சு கடைசில சாப்ட்வேர் துறைல குப்ப கொட்டிக்கிட்டு இருக்கேன். அதனால படம் ஒரு வகைல என் மனதை நேரடியா தொட்டது. சேரன் மாதிரியான இயக்குனர்கள் கொஞ்சம் இந்த மாதிரி படங்களை பார்த்தால் நல்லது. (சேரனை எனக்கு பிடிக்கும். அதனால தான் இந்த கமெண்ட். அவர் நம்மள ரெம்ப அழுக வைக்குற மாதிரி ஒரு எண்ணம். இந்த படம் சிரிக்க வைத்து கொண்டே கருத்து சொல்லுகிறது).

அவதார் பார்த்த பொழுது பிரமிப்பு மிஞ்சியது.  "த்ரீ இடியட்ஸ்"  பார்த்த பொழுது ஒரு புன்னகையுடன் நம் சமுகத்தின் மேல் வெறுப்பு வந்தது  (அந்த சமுகத்தில் நானும் அடக்கம் என்பதை உணரும் போது வெறுப்பு இன்னும் அதிகம் ஆகியது).

பின் குறிப்பு: விமர்சனம் என்ற வார்த்தை வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டுள்ளது.  சம்பிபதில் விமர்சனம் செய்ய ஒரு தகுதி வேண்டும் என்று எங்கோ படித்ததின் விளைவு.

Saturday 12 December 2009

படித்ததில் (வலை மேய்ந்ததில்) பிடித்தது

முதல நம்ம ஊரு செய்தி!! தமிழக கல்வி துறையின் வலைப்பக்கம் இது.
http://pallikalvi.in/  ரெம்ப நல்லா இருக்கு. நம்ம நாட்டுல இப்படி எல்லாம் நல்ல விஷயங்கள் கூட நடக்குது!! ஹ்ம்ம்...ஏதோ நல்லதா நடந்தா சரி.

உங்களுக்கு தெரியுமா? உலக நாடுகளில் சென்ற பத்து ஆண்டுகளில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் குடுத்து, இன்று மருத்துவம் படிப்பவர்களில்  50% மேல் பெண்கள் என்ற பெருமை கொண்ட நாடு எது என்று? யோசிச்சுகிட்டே இருங்க. இடுகையின் கடைசியில் விடை.

டைகர் வூட்ஸ்...ஒரு பில்லியன் டாலர் மனிதன்..எல்லாராலும் பெரியதாக மதிக்கப்பட்டவர்...மதிக்கபடுபவர்..நானும் இவரின் விளையாட்டுக்கு பெரிய ரசிகன்..இதுக்கு மேல என்ன இருக்கு சாதிக்க என்ற நிலைக்கு சென்று கொண்டிருந்த மனிதனின் வாழ்க்கையில் பெரிய சரிவு. என்றாலும் அவர் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்..இன்று ஒரு பெண் இல்லை பல பெண்கள் அவர் மேல் இந்த பழியை போடுவதை பார்த்தால், இது என்றேனும் தன்னை தாக்கும் என்று அவர் அறியாமல் இருந்தார் என்பதை நம்ப முடியாது. "இதெல்லாம் பெரிய இடங்கள ரெம்ப சகஜம்" என்ற நெனப்பு தான். நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும் சாமி...உண்மையாவே பொழப்ப கெடுதுருச்சு.கொஞ்ச நாளைக்கு விளையாடுவது இல்லைன்னு முடிவு செயுது இருக்கிறார். அவர் வந்த விளம்பரங்கள் திடிர் என்று காணவில்லை. ஹ்ம்ம்...எல்லாம் ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.. திரும்பி  "புலி" ஆட்டம் ஆட வரணும்...

புது பாட்டுக்கள் கேட்டு கொண்டிருந்தேன்...திடிர்னு அம்மா பற்றி ரெண்டு பாட்டுக்கள். ரெம்ப நல்லா இல்லைனாலும் ஓகே ரகம்.கேட்டு பாருங்களேன். முதல் பாட்டு ஜேசுதாஸ்!! :)
http://www.raaga.com/play/?id=179428
http://www.raaga.com/play/?id=179602

போன வாரம் TED பற்றி ஒரு இடுகை போட்டிருந்தேன். அதோட தொடர்ச்சியா இதோ இன்னொரு பேச்சு.
http://www.ted.com/talks/lang/tam/hans_rosling_shows_the_best_stats_you_ve_ever_seen.html

வீடியோக்கு கீழ sub titles drop down-la நீங்க தமிழ தேர்ந்தெடுத்து அவர் பேசுவதை தமிழில் படிக்கலாம். அவர் சொல்றது நடந்தா சந்தோசமா தான் இருக்கும். நடக்குமா?
இந்த பேச்சு உங்களுக்கு பிடிச்சிருந்தா http://www.gapminder.org/ போங்க. இது மாதிரி பல வீடியோக்கள் இருக்கு. நீங்களே உங்க கிராப்-அ வரையலாம். ரெம்ப அருமையான வலைபக்கம். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கூகிள் இத காசு குடுத்து வாங்கியது.

இன்னைக்கு அவ்ளோ தான்.

சொல்ல மறந்துட்டேன்..மேல சொன்ன நாடு ஈரான்!!