Sunday, 27 December, 2009

3 இடியட்ஸ் - பட அறிமுகம்அவதார் பார்த்து அதிர்த்து போனதுக்கு அப்புறம் "3 Idiots" பார்க்க நண்பர்களுடன் திரை அரங்கம் சென்றேன். அமீர் கானின் "Tare Zameen Par" அப்புறம் அவர் மேல ஒரு தனி மதிப்பு  உண்டு. (கமல்-ட்ட இருக்க மாதிரி ). நீங்க  "Tare Zameen Par" பார்க்கலைன்னா கண்டிப்பா பாருங்க. எனக்கு பெருசா ஹிந்தி தெரியாது. ஏதோ அப்பா அடிப்பாரேன்னு பயத்துல சின்ன வயசுல படிச்சது...அவ்ளோ தான்... நண்பர்களின் மொழிமாற்ற உதவியுடன் தான் படம் பார்த்தேன்.

ஒரு கல்லூரி கதை. சின்னதாய் உங்களுக்குள் நம்பிக்கை துளிர் விட வைக்கும் படம். படத்தின் கதையை சொல்வதாய் இல்லை. :) நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அமிரின் நடிப்பு எப்பொழுதும் போல் சூப்பர். மிச்சவங்க அவங்க அவங்க வேலைய ஒழுங்கா பார்த்திருக்காங்க. நம்முரு மாதவனும் அசத்தி இருக்கார். பாடல்கள் தாளம் போட வைத்தன. பின்னணி இசை படத்தை பாதிக்காமல் சென்றது. படத்தின் முக்கியமான விஷயம் நகைச்சுவை. (இதற்காகவே  கண்டிப்பாக ஹிந்தி தெரிந்தவர் வேண்டும்,...அங்க தான இடிக்குது அப்படின்னு சொல்லறது கேக்குது..). தமிழில் இந்த படம் வெளியிட பட்டதா?

எனக்கு சினிமா மொழி தெரியாது. அதனால ஒலி,ஒளி பத்தி எல்லாம் கேக்காதிங்க. :)
ஒரு ரசிகனாக  படம் புடிச்சுது. அமிரோட முந்தின படங்கள் அளவுக்கு இல்லைன்னு தான் சொல்லணும். ஒரு சில லாஜிக் சொதப்பல்கள், திரைகதையில் சில இடங்களில் தொய்வு. அமிரை நிறையவே முன்னிறுத்தி விட்டது போன்ற உணர்வு. (நம்ம ஊரு கதாநாயகர்கள் அளவுக்கு இல்லை என்றாலும்..)

"ஆல் இஸ் வெள்" என்பது தான் பஞ்ச் டயலாக். முன்னாபாய் இயக்குனரின் படம் இது. பல இடங்களில் அது தெளிவாய் தெரிகிறது. மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பது படத்தின் கருத்து. நான் கூட ஆடிட்டர் ஆகனும்னு நெனச்சு கடைசில சாப்ட்வேர் துறைல குப்ப கொட்டிக்கிட்டு இருக்கேன். அதனால படம் ஒரு வகைல என் மனதை நேரடியா தொட்டது. சேரன் மாதிரியான இயக்குனர்கள் கொஞ்சம் இந்த மாதிரி படங்களை பார்த்தால் நல்லது. (சேரனை எனக்கு பிடிக்கும். அதனால தான் இந்த கமெண்ட். அவர் நம்மள ரெம்ப அழுக வைக்குற மாதிரி ஒரு எண்ணம். இந்த படம் சிரிக்க வைத்து கொண்டே கருத்து சொல்லுகிறது).

அவதார் பார்த்த பொழுது பிரமிப்பு மிஞ்சியது.  "த்ரீ இடியட்ஸ்"  பார்த்த பொழுது ஒரு புன்னகையுடன் நம் சமுகத்தின் மேல் வெறுப்பு வந்தது  (அந்த சமுகத்தில் நானும் அடக்கம் என்பதை உணரும் போது வெறுப்பு இன்னும் அதிகம் ஆகியது).

பின் குறிப்பு: விமர்சனம் என்ற வார்த்தை வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டுள்ளது.  சம்பிபதில் விமர்சனம் செய்ய ஒரு தகுதி வேண்டும் என்று எங்கோ படித்ததின் விளைவு.

Saturday, 12 December, 2009

படித்ததில் (வலை மேய்ந்ததில்) பிடித்தது

முதல நம்ம ஊரு செய்தி!! தமிழக கல்வி துறையின் வலைப்பக்கம் இது.
http://pallikalvi.in/  ரெம்ப நல்லா இருக்கு. நம்ம நாட்டுல இப்படி எல்லாம் நல்ல விஷயங்கள் கூட நடக்குது!! ஹ்ம்ம்...ஏதோ நல்லதா நடந்தா சரி.

உங்களுக்கு தெரியுமா? உலக நாடுகளில் சென்ற பத்து ஆண்டுகளில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் குடுத்து, இன்று மருத்துவம் படிப்பவர்களில்  50% மேல் பெண்கள் என்ற பெருமை கொண்ட நாடு எது என்று? யோசிச்சுகிட்டே இருங்க. இடுகையின் கடைசியில் விடை.

டைகர் வூட்ஸ்...ஒரு பில்லியன் டாலர் மனிதன்..எல்லாராலும் பெரியதாக மதிக்கப்பட்டவர்...மதிக்கபடுபவர்..நானும் இவரின் விளையாட்டுக்கு பெரிய ரசிகன்..இதுக்கு மேல என்ன இருக்கு சாதிக்க என்ற நிலைக்கு சென்று கொண்டிருந்த மனிதனின் வாழ்க்கையில் பெரிய சரிவு. என்றாலும் அவர் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்..இன்று ஒரு பெண் இல்லை பல பெண்கள் அவர் மேல் இந்த பழியை போடுவதை பார்த்தால், இது என்றேனும் தன்னை தாக்கும் என்று அவர் அறியாமல் இருந்தார் என்பதை நம்ப முடியாது. "இதெல்லாம் பெரிய இடங்கள ரெம்ப சகஜம்" என்ற நெனப்பு தான். நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும் சாமி...உண்மையாவே பொழப்ப கெடுதுருச்சு.கொஞ்ச நாளைக்கு விளையாடுவது இல்லைன்னு முடிவு செயுது இருக்கிறார். அவர் வந்த விளம்பரங்கள் திடிர் என்று காணவில்லை. ஹ்ம்ம்...எல்லாம் ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.. திரும்பி  "புலி" ஆட்டம் ஆட வரணும்...

புது பாட்டுக்கள் கேட்டு கொண்டிருந்தேன்...திடிர்னு அம்மா பற்றி ரெண்டு பாட்டுக்கள். ரெம்ப நல்லா இல்லைனாலும் ஓகே ரகம்.கேட்டு பாருங்களேன். முதல் பாட்டு ஜேசுதாஸ்!! :)
http://www.raaga.com/play/?id=179428
http://www.raaga.com/play/?id=179602

போன வாரம் TED பற்றி ஒரு இடுகை போட்டிருந்தேன். அதோட தொடர்ச்சியா இதோ இன்னொரு பேச்சு.
http://www.ted.com/talks/lang/tam/hans_rosling_shows_the_best_stats_you_ve_ever_seen.html

வீடியோக்கு கீழ sub titles drop down-la நீங்க தமிழ தேர்ந்தெடுத்து அவர் பேசுவதை தமிழில் படிக்கலாம். அவர் சொல்றது நடந்தா சந்தோசமா தான் இருக்கும். நடக்குமா?
இந்த பேச்சு உங்களுக்கு பிடிச்சிருந்தா http://www.gapminder.org/ போங்க. இது மாதிரி பல வீடியோக்கள் இருக்கு. நீங்களே உங்க கிராப்-அ வரையலாம். ரெம்ப அருமையான வலைபக்கம். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கூகிள் இத காசு குடுத்து வாங்கியது.

இன்னைக்கு அவ்ளோ தான்.

சொல்ல மறந்துட்டேன்..மேல சொன்ன நாடு ஈரான்!!

Monday, 30 November, 2009

ஆறாம் உணர்வு!!

முதல எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகிறேன். நீங்க கீழ படிக்கிறது பத்தி உங்களுக்கு முன்னமே தெரியும்னா, "போடா போடா பொழச்சு போடா-னு" விட்டுருங்க. உங்களுக்கு இது புது செய்தினா, எனக்கு சந்தோசம். எப்படினாலும் ஒரு கருத்து சொல்லிட்டு போங்க.

சரி இடுகைக்கு வருவோம். முதல TED பற்றி ஒரு அறிமுகம்.

TED என்பது ஒரு லாப நோக்கு இல்லாத ஒரு நிறுவனம். TED எனபது டெக்னாலஜி (தொழிநுட்பம்), என்டர்டைன்மென்ட்(பொழுதுபோக்கு), டிசைன்(வடிவமை) என்பதின் சுருக்கம். உலகம் முழுதும் இந்த மூணு துறைகள்ல இருக்க அறிஞர்கள ஒரு இடத்துல கொண்டு வந்து அவங்களோட கருத்துக்கள பகிர்ந்து கொள்ள ஒரு மேடை ஏற்படுத்தி கொடுக்குறாங்க.

இந்த வருடம் முதல் முறையா இந்தியா-ல இந்த கருத்தரங்கு மைசூர்-ல நடைபெற்றது. தெற்கு ஆசியா-வின் முன்னேற்றம் தான் கருத்தரங்கின் முக்கிய பார்வை. எங்க நிறுவனத்தின் முன்னாள்(?) தலைவர் கூட இந்தியா முன்னேற என்ன செயனும்னு பேசினார். அந்த சுட்டி இங்க. நல்ல பேச்சு. ஆனா நெறைய பேரால இதே மாதிரி பேச முடியுமே.

இது போல, ஒரு தொழிநுட்ப பேச்சா தான் எல்லாரும் "ஆறாம் உணர்வை"யும் நெனச்சாங்க.ஆனா இத பிரணவ் மிஸ்ரா பேசி முடிஞ்ச உடன அரங்கமே எழுந்து நின்றது. பேச்சோட சுருக்கம் என்னன்னா "நீங்க உங்க நிஜ உலகம் வேற, டிஜிட்டல் உலகம் வேற, அப்படி தான நினைகுறிங்க? அந்த வித்தியாசத்த இல்லாம பண்றது தான்" ப்ரனவோட புது யுத்தி. உங்க கைல சின்ன sensora மாட்டி விட்டுற வேண்டியது. இது நீங்க என்ன செயனும்னு நெனைச்சாலும் அத செய்யும். போட்டோ எடுக்கனுமா நம்ம ஊரு டைரக்டர் கைய தூக்குற மாதிரி தூக்க வேண்டியது தான்.


போன் பேசனுமா? உங்க கைல இருக்குற (இல்லாத) ஒரு சின்ன keypadla தட்டச்சு செய வேண்டியது தான்.
சரி சரி, நான் சொன்னா நம்ப மாட்டிங்க. நீங்களே பாருங்களேன். சுட்டி இங்க.

பிரணவ் மிஸ்ட்ரி-யின் வலைப்பக்கம் http://www.pranavmistry.com/

பிரணவ பார்த்தா பெருமையாவும் பொறாமையாவும் இருக்கு.

பிரணவ ரெண்டு விஷயத்துக்காக தனியா பாராட்டனும்.

1. இந்தியா தனக்கு நெறைய கத்து குடுத்தத பெருமையா ஒதுக்குறதுக்கு. M.I.T  தான் காரணம்னு சொல்லறது ரெம்ப ஈசியா இருந்துருக்கும்.
2. இத திறமூலம் (Open Source-a) ஆக்க போறதா சொன்னது.

நைட் ஷ்யாமளன் குடுத்த "Sixth Sense" மாதிரி இந்த "ஆறாம் உணர்வும்" ஒரு பெரிய விஷயம்.

இது ஒரு பெரிய உருவாக்கம். (Invention-ku தமிழ் வார்த்த உருவாக்கமா இல்ல கண்டுபுடிப்பா? Discovery தான கண்டுபிடிப்பு?)

பிரணவ் , உங்களுக்கு பெரிய சல்யுட். 

இது வரைக்கும் பொறுமையா படிச்சதுக்கு நன்றி.  TED பத்தி இன்னும் நெறைய எழுதலாம்னு இருக்கேன். மக்கா, என்ன சொல்லறிங்க?

புடிச்சிருந்தா ஒரு வோட்டு போட்டுட்டு போங்களேன்.

Friday, 27 November, 2009

அமெரிக்க விருந்து!!

இந்த வார அமெரிக்க நிகழ்வுகள்!!

இத படிங்க மொதல
http://www.nydailynews.com/ny_local/2009/11/27/2009-11-27_shock__awe_over_their_nerve.html
நம்ம ஊருல கூட நம்ல இப்படி மதிக்க மாட்டங்க!!

டிஸ்கி: இது துபாய் கத.
நல்லா இருக்கா இல்லையானு சொல்லிட்டு போங்க மக்கா...

Saturday, 31 October, 2009

சஷ்டி 2009-ம் அம்மாவும்

எல்லாரும் தீபாவளி பத்தி பதிவு போட்டாங்க...சரி நாம வித்தியாசமா இருக்க வேண்டாமா? அதான் சஷ்டி பத்தி பதிவு..

உண்மைய சொல்லனும்னா தீபாவளி எல்லாம் இப்போ பெரிய உற்சாகத்த தரது இல்ல... அந்த பதினஞ்சு வயசு செந்தில் ஓடி ஓடி பட்டாசு வெடிச்சது, ஊரு குப்பை எல்லாம் எடுத்து எங்க வீட்டு வாசல்ல போட்டது, அம்மாவோட வடைக்காக அடுப்படில காத்துகிட்டு இருந்தது, எல்லாம் இப்போ இல்ல...ரெண்டு மூணு வருசமா புது டிரஸ் கூட எடுக்கல...சரி சஷ்டிக்கு வருவோம்...நான் இருக்க ஊருல (நான் இருக்கிறது அமெரிக்கா-ல ஒரு சின்ன ஊரு) ஒரு அழகான கோவில சஷ்டி கொண்டாட போறங்கனு கேள்வி பட்டேன்...

உடனே flashback.. 15 வருஷம் முன்னாடி போறோம்...எங்க? தேவகோட்டைக்கு...அதாங்க நம்ம சொந்த ஊரு...(ஊரு முழுக்க நமக்கே சொந்தமுனு நெனபோ ,  இல்ல ஊரு முழுக்க நமக்கு சொந்தகாரங்க இருக்குற நெனபோ, "சொந்த ஊரு"க்கு பெயர் காரணம் எல்லாம் கேட்க கூடாது)..1970-ல எல்லாம் கிருபானந்த வாரியார் சஷ்டிக்கு தேவகோட்டைக்கு வருவாராம்...அம்மா பெருமையா சொல்வாங்க...என்னோட சின்ன வயசுல அங்க பள்ளி குழந்தைகள் எல்லாம் சஷ்டி வாரத்துல முருகன் கோவில மேடைல எதாவது சமுக பிரச்சனை பற்றி பேசலாம்..எனக்காக அம்மா பெரிய ஆளுங்கள புடிச்சு பேச வாய்ப்பு வாங்குவாங்க....அந்த மழலை குரலில் நாங்க பேசுவதை, வாதாடுவதை கேட்கவே முருகன் வருவார் என்று மக்கள் நம்பினார்களோ? :-) அம்மா எழுதி கொடுப்பதை அப்படியே பேசி வருவேன்...அப்புறம் பஜனை..அம்மா மனமுருகி பாடும் முருகன் பாட்டுக்காகவே அவர் பக்கத்தில் உக்காருவேன்...அம்மாவுக்கு சங்கீதம் தெரியாது.. ராகமும் தாளமும் தெரியாது..ஆனா முருகன தெரியும்..பாடும் பாட்டின் அர்த்தம் தெரியும்...ரெம்ப பெருமையா இருக்கும்...அங்க பெரிய போட்டியே இருக்கும்...யாரு அடுத்த பாட்டு பாடுறதுன்னு..ஒரு பாட்டு முடிஞ்ச அடுத்த நொடில யாராவது அடுத்த பாட்டு பாட ஆரம்பிச்சுருவாங்க... "சேர்ந்து பாடுடா" அம்மா சொன்ன போது எல்லாம் கேட்டது இல்ல... அவங்க எல்லாம் பாடுறத பிரமிச்சு போய் கேட்டுகிட்டே இருந்துருகேன்...அவங்க பாடல்களே என்னை முருகனிடம் அழைத்து சென்றதால் நான் பாடவில்லை என்று நினைக்கறேன்...மறக்க முடியாத நாட்கள்...

சரி, 2009-க்கு வாங்க..சஷ்டி முதல் நாள்...ஞாயிறு மாலை..கோவிலுக்கு போனேன்...ஒரே ஒரு தமிழ் குடும்பம் மட்டும் வந்திருதாங்க..கந்த சஷ்டி கவசம் பாட ஆரம்பிச்சோம்...ரெண்டாவது பாராவுல நான் அழுக ஆரம்பிச்சுட்டேன்...இங்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு...ரொம்ப தடவ அம்மாவ மிஸ் பண்ணிருக்கேன்..ஆனா இன்னைக்கு வர அழுதது இல்ல..அம்மாவுக்கு நா அழுதா பிடிக்காது.. எப்போவுமே ஒரு அழைப்பில் அம்மா இருக்கிறார் என்ற எண்ணமே என்னை அடுத்த நொடிக்கு இழுத்து சென்று கொண்டிருந்தது. ஆனால் சஷ்டி என்னை அழ வைத்து விட்டது.. இதுவரை முருகனை அம்மா மூலமாக தான் பார்த்து இருக்கிறேன்... இன்று அம்மா மைல்களுக்கு அப்பால்..நான் தனியாய்...சஷ்டி படிக்க முடியவில்லை... ஒரு விஷயம் சின்னதாக இருந்தாலும் சில நேரங்களில் நம்மை முழுதாக ஆட்கொண்டு விடுவது மிகவும் ஆச்சிரியம் தான்..வீடு திரும்பும் போது அடுத்த நாள் கோவிலுக்கு போவதில்லை என்று முடிவு எடுத்தேன்...ஆனால் அன்று இரவு அதிசியமாய் ஆழ்ந்து தூங்கினேன், அம்மா மடியில் தூங்கியது போல. அடுத்த நாள் முழுக்க காரணமே இல்லாமல் சந்தோசமாக இருந்தேன். என் கார் என்னை கேட்காமலே கோவிலுக்கு இழுத்து சென்றது..மிக மிக சந்தோசமாய் சஷ்டி பாடினேன்...அம்மா என் கூட பாடுற மாதிரி இருந்தது. என்னை நம்புங்கள்!!. அம்மா என்னோடு பாடினாங்க.பாடி முடித்து கண் திறந்த பொழுது முருகன் தெரியவில்லை...அம்மா தெரிந்தார்...பின் ஏழு நாட்களும் கோவில் சென்றேன். திருமணம் ஆகாத ஒரு விளையாட்டு வயது பிள்ளை, பொறுப்பாக எல்லா நாளும் கோவிலுக்கு வந்தது பலர் புருவத்தை உயர்த்தியது..அவர்களுக்கு தெரியாது, நான் என் அம்மாவை பார்க்க வந்தேன் என்று...நான் மட்டுமே திருமணம் ஆகாதவன் என்பதால் மீதம் இருந்த பிரசாதம் எனக்காக தினமும் பொட்டலம் கட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் சஷ்டி பாடிய பொழுது என் சந்தோசம் பல மடங்கு ஆனது.அன்று அம்மா பாட கெஞ்சிய போது நான் பாடவில்லை...அன்று அம்மா மூலம் முருகன் தெரிந்தான்...இன்று முருகன் மூலம்  அம்மா தெரிந்தார். கோவிலில் பல தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். சூர சம்காரமும், முருகன் திரு கல்யாணமும் என்னை பழைய நினைவுகளுக்கு இழுத்து சென்றது.

இன்று வரை அம்மாவிடம் நான் சஷ்டிக்கு போனது பற்றி சொல்லவில்லை..சொன்னால் ரெம்ப சந்தோஷ படுவாங்க..ஆனால் நான் சொல்லும்போது அழுது விடுவேன்...அப்பறம் அம்மா சங்கடப்படுவங்க. வேண்டாம் சில அழுகைகள் நம்முடன் மட்டுமே இருப்பது நல்லது...ஆனா ஒன்னு நிச்சியம்...அடுத்த தடவ அம்மா முருகன் பாட்டு பாடுறப்போ நான் அவங்க கூட பாடிகிட்டு இருப்பேன்..

டிஸ்கி: முதல் நாள் சஷ்டி வந்த தமிழ் குடும்பத்தில் ஒரு சிறுவன் ரெம்ப துருதுரு-னு இருந்தான்...அழகாக மயில் வரைந்தான். கடைசி நாளில் அவன் செய்து கொண்டு வந்த சூரனை பார்த்த பொழுது பொறாமையை இருந்தது, அவன் கலை ஆர்வத்தை பார்த்து. அதே போல் திருகல்யாணத்தன்று பரதம் ஆடிய சிறுமிகளை பார்த்த பொழுதும் மிகவும் வெட்கப்பட்டேன். சிறு வயதில் அம்மா கற்று குடுக்க நினைத்த எதையும் கற்காமல் விளையாட்டு பிள்ளையாகவே இருந்து விட்டோமே என்று..கிழே இருப்பது எங்க ஊர் சூரன்... :-)


Saturday, 20 June, 2009

Dangers of iReports

With the new problems in Iran, TV media is completely behind twitters and facebooks. When everyone is praising it as new "Twitter revolution", as someone pointed out Iran is not into revolution yet and definitely not because of twitter. Come on people, do you think million people in Iran came after reading their tweets? American media easily hide the facts when they don't want to show. Did anyone tell us about their percentage of Internet penetration in Iran? Who knows, except for this twitter-friendly college students everyone else in Iran in support of the Ahmadinejad. I am not saying the media is hiding facts, i am just saying that media is choosing what we want to hear. Media is going by a bunch of protesters who are completely on one side of this battle. A regular reporter has a lot of responsibilities which are ignored by these ireporters. It makes sense to use the ireport in the case of flight crash or an accident like that where Media cannot be there at the time of happening. But in issues like Iran, Media cannot take sides just because they are getting news from one side which is Internet media savvy and other side is not much interested on what they report.

I seriously feel we are hearing one side of the story here and the other side is ignored just because they dont feed the world media with their iReports.

Sunday, 22 March, 2009

Online Cinema

Have you ever wanted to see a good cinema, but didnt have any theaters playing it nearby? Finally ended up watching in some website with bad quality? Or if the quality was good, had a guilty feeling that you have to pay back to producers who produced a nice movie and was wondering what is their paypal id? I have sometimes. Now you can watch movies online with very good quality and pay them as well.

www.onlycinema.com

Give a try!!!

Sunday, 22 February, 2009

Osacr-il தமிழ்

We indians always had the best entertainment industry in the world, but rarely got noticed. We had the best actors, musicians, lyrics writers, dialogues, story writers last but the not the least directors. But we never got appreciation from rest of the world.

So today when A.R.Rahman won the award, he broke that history and gave a hope to all of us that in the years to come, we will be noticed more. Thanks and Congrats ARR. I was so happy to hear the world chennai in the oscar stage and in top of all, when he said "Ella pugallaum irraivanukae" in Tamil, i was stunned without words.

There are no parallels in this generation to compare his achievements. I can try to imagine few people coming somewhere near to him like Vishawanathan Anand, Paes/Bhupathi or like Tata/Ambani/NRN/Premji. But none can reach him. How can you give some music which everyone in the world loves.

"Hats off A.R.Rahman"

எல்லா புகழும் இறைவனுக்கே

Sunday, 15 February, 2009

Nan Kadavul - Movie review

நான் கடவுள் - பாலாவின் புது படம். மூன்று வருட உழைப்பு. மிக அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். உங்களுக்கு படம் பிடிகிறதோ இல்லையோ, எப்படி ரஜினி படம் பார்கிறோமோ,அது மாதிரி கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.

ஆர்யா-வையும் பூஜா-வையும் தவிர மற்றவர்கள் எல்லாரும் சினிமாவுக்கு புதுசு. ஆனால் நடிப்பில் ஒரு குறை கிடையாது. அதில் தெரியுது பாலாவின் திறமை. கதை ஒன்றும் பெரிய கதை கிடையாது. ஒரு சிறுகதை. ஆனால் பாலாவின் இயக்கத்தில் மிக அற்புதமா வந்திருக்கு. படத்தில் மசாலா கிடையாது. பெரிய heroism கிடையாது. படத்தில் உங்களை தேட வேண்டாம். படத்தை பார்த்த பின் படத்தில் உள்ள எந்த கதாபாத்திரமாகவும் மாற எண்ணமாட்டிர்கள் . எனவே படத்தை பற்றி ஒரு முறை அறிந்து கொண்டு போவது உசிதம். There is no character which you can relate to yourself and there is no heroism which would inspire you.

படத்தின் கதை பற்றி நான் ஒன்றும் சொல்வதாக இல்லை. எனவே மற்ற துறைகளை பார்போமா:

இசை : ராஜா படம் முழுக்க ஆதிக்கம் செல்லுத்துகிறார். பாலா போல ராஜாவுக்கும் இது ஒரு மைல் கல். இசை தட்டில் இருந்த ஒரு சில பாடல்களை படத்தில் காணவில்லை.

http://www.youtube.com/watch?v=cjNbQHYRV2k&feature=PlayList&p=E1595B0938640E57&index=0
வாலியின் வரிகளில் வலி அதிகம்.

கேமரா: மிக அருமையாக ஆர்யாவிடம் விளையாடுகிறது. மற்ற இடங்களில் பரவாயில்லை ரகம். காசியை இன்னும் அருமையாக காட்டி இருக்கலாம்.
வசனம்: சின்ன சின்ன ஆனால் முள்ளாக குத்தும் வசனங்கள் . தாய்யையும் விமர்சிக்கும் வசனங்கள்.
நடிப்பு: படத்தில் எல்லாரும் பிரமாதமாய் நடித்திருக்கிறார்கள். ௧00% (100%) தங்கள் திறமையை வெளிபடுத்தி இருக்கிறார்கள். வில்லன்கள் உட்பட.

குறை:
குறை ஒன்றும் இல்லை என்று சொல்ல நினைத்தாலும் , ஒரு சிலவற்றை இன்னும் நன்றாக செய்திருக்கலாம். படம் இன்னும் முடியவில்லையோ என்ற எண்ணம் உள்ளது. காசியில் ஆர்யாவின் ௧௪ (14) வருட வாழ்கையை இன்னும் கொஞ்சம் காட்டி இருக்கலாம். பாடல்கள் கதையுடன் வெகுவாக ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது. பாலா U/A வாங்க படத்தை சிறிது சுருக்கி விட்டதாக சொல்கிறார்கள். உண்மையா பாலா?

மொத்தத்தில் ௪.௫/௫ ( 4.5/5).

A historic flim which is a milestone in tamil movie industry and will be a milestone with everyone associated with it. Hats off Bala.