Monday, 30 November, 2009

ஆறாம் உணர்வு!!

முதல எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகிறேன். நீங்க கீழ படிக்கிறது பத்தி உங்களுக்கு முன்னமே தெரியும்னா, "போடா போடா பொழச்சு போடா-னு" விட்டுருங்க. உங்களுக்கு இது புது செய்தினா, எனக்கு சந்தோசம். எப்படினாலும் ஒரு கருத்து சொல்லிட்டு போங்க.

சரி இடுகைக்கு வருவோம். முதல TED பற்றி ஒரு அறிமுகம்.

TED என்பது ஒரு லாப நோக்கு இல்லாத ஒரு நிறுவனம். TED எனபது டெக்னாலஜி (தொழிநுட்பம்), என்டர்டைன்மென்ட்(பொழுதுபோக்கு), டிசைன்(வடிவமை) என்பதின் சுருக்கம். உலகம் முழுதும் இந்த மூணு துறைகள்ல இருக்க அறிஞர்கள ஒரு இடத்துல கொண்டு வந்து அவங்களோட கருத்துக்கள பகிர்ந்து கொள்ள ஒரு மேடை ஏற்படுத்தி கொடுக்குறாங்க.

இந்த வருடம் முதல் முறையா இந்தியா-ல இந்த கருத்தரங்கு மைசூர்-ல நடைபெற்றது. தெற்கு ஆசியா-வின் முன்னேற்றம் தான் கருத்தரங்கின் முக்கிய பார்வை. எங்க நிறுவனத்தின் முன்னாள்(?) தலைவர் கூட இந்தியா முன்னேற என்ன செயனும்னு பேசினார். அந்த சுட்டி இங்க. நல்ல பேச்சு. ஆனா நெறைய பேரால இதே மாதிரி பேச முடியுமே.

இது போல, ஒரு தொழிநுட்ப பேச்சா தான் எல்லாரும் "ஆறாம் உணர்வை"யும் நெனச்சாங்க.ஆனா இத பிரணவ் மிஸ்ரா பேசி முடிஞ்ச உடன அரங்கமே எழுந்து நின்றது. பேச்சோட சுருக்கம் என்னன்னா "நீங்க உங்க நிஜ உலகம் வேற, டிஜிட்டல் உலகம் வேற, அப்படி தான நினைகுறிங்க? அந்த வித்தியாசத்த இல்லாம பண்றது தான்" ப்ரனவோட புது யுத்தி. உங்க கைல சின்ன sensora மாட்டி விட்டுற வேண்டியது. இது நீங்க என்ன செயனும்னு நெனைச்சாலும் அத செய்யும். போட்டோ எடுக்கனுமா நம்ம ஊரு டைரக்டர் கைய தூக்குற மாதிரி தூக்க வேண்டியது தான்.


போன் பேசனுமா? உங்க கைல இருக்குற (இல்லாத) ஒரு சின்ன keypadla தட்டச்சு செய வேண்டியது தான்.
சரி சரி, நான் சொன்னா நம்ப மாட்டிங்க. நீங்களே பாருங்களேன். சுட்டி இங்க.

பிரணவ் மிஸ்ட்ரி-யின் வலைப்பக்கம் http://www.pranavmistry.com/

பிரணவ பார்த்தா பெருமையாவும் பொறாமையாவும் இருக்கு.

பிரணவ ரெண்டு விஷயத்துக்காக தனியா பாராட்டனும்.

1. இந்தியா தனக்கு நெறைய கத்து குடுத்தத பெருமையா ஒதுக்குறதுக்கு. M.I.T  தான் காரணம்னு சொல்லறது ரெம்ப ஈசியா இருந்துருக்கும்.
2. இத திறமூலம் (Open Source-a) ஆக்க போறதா சொன்னது.

நைட் ஷ்யாமளன் குடுத்த "Sixth Sense" மாதிரி இந்த "ஆறாம் உணர்வும்" ஒரு பெரிய விஷயம்.

இது ஒரு பெரிய உருவாக்கம். (Invention-ku தமிழ் வார்த்த உருவாக்கமா இல்ல கண்டுபுடிப்பா? Discovery தான கண்டுபிடிப்பு?)

பிரணவ் , உங்களுக்கு பெரிய சல்யுட். 

இது வரைக்கும் பொறுமையா படிச்சதுக்கு நன்றி.  TED பத்தி இன்னும் நெறைய எழுதலாம்னு இருக்கேன். மக்கா, என்ன சொல்லறிங்க?

புடிச்சிருந்தா ஒரு வோட்டு போட்டுட்டு போங்களேன்.

4 comments:

cheena (சீனா) said...

ஏற்கனவே கேள்விப்பட்டேன் - நல்ல பயனுள்ள அரிய தக்வல்கள் அடங்கிய இடுகை - இன்னும் விளக்கமாக எழுதுக - புரியும் வண்ணம் எழுதினால் நலமாய் இருக்கும். நல்வாழ்த்துகள் செந்தில் நாதன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

முதல எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகிறேன். நீங்க கீழ படிக்கிறது பத்தி உங்களுக்கு முன்னமே தெரியும்னா, "போடா போடா பொழச்சு போடா-னு" விட்டுருங்க. //

படிச்சாச்சு. இருந்தாலும் பரப்பப்படவேண்டிய செய்திதான்.

செந்தில் நாதன் said...

நன்றி சீனா, ஆதி!!

அஸ்லம் கான் said...

Invention-ku தமிழ் வார்த்த உருவாக்கமா இல்ல கண்டுபுடிப்பா? Discovery தான கண்டுபிடிப்பு


Uruvaakkam thaan sari...invention is new..discovery is you find from existence..athu kandupudippu...tholainthathathai thaane kandupudikkamudiyum..