சரி பார்த்த படங்கள் பற்றிய என் கருத்து. விமர்சனம் இல்லை மக்கா. வெறும் கருத்து.
முதல பார்த்த படம் அசல். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தான் பார்க்க ஆரம்பிதேன். நான் மசாலா படம் பார்த்து ரெம்ப நாள் ஆகியிருந்ததாலும், அஜித்தின் சமீபத்திய பேச்சுக்கள் எனக்கு பிடித்து இருந்ததாலும்,அசல் பார்க்க முடிவெடுத்தேன். சரி நேர படத்துக்கு போவோம். என்ன தான் எதிர்பார்ப்பே இல்லை என்றாலும், அஜித்-சரண் கூட்டணி இன்னும் கொஞ்சம் நல்ல படத்த தந்து இருக்கலாமுன்னு நினைக்குறேன். படம் தமிழ் நாட்டை தவிர உலகில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஏனோ தனியாய் கேட்ட பொழுது பிடித்த பாடல்கள், படத்தில் பிடிக்கவில்லை. மசாலா படத்தில் பாடல் படத்தோடு ஓட்டும் என்று எதிர்பார்க்க கூடாது தான், ஆனால் பாடல்களில், ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டாமா? தல, நீங்க இளைய தளபதிய பார்த்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. படம் பில்லா-வை அடிக்கடி ஞாபகம் படுத்தியது, கடியாய் இருந்தது. அஜித்தை தவிர படத்தில் யாருக்கும் நடிக்க வாய்ப்பு கிடையாது. அடுத்த தடவ இன்னொரு மசாலா படம்னு விமர்சனம் படித்தால், நான் அஜித் படம் பார்க்க மாட்டேன்னு நினைகிறேன். அட வெறும் மசாலா தான, அப்போ புது நடிகர்கள் படம் பார்போம்மே, புதுசா ஏதாவது இருக்கும். எதுக்கு அஜித்?
வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது. பல இடங்களில் படத்த fast forward செய்ய முடிந்தது. அசலில் அசலா எதுவும் இல்லை .
ரெண்டாவது படம், தமிழ்ப்படம்,கலக்கிட்டாங்க மக்கா. விழுந்து விழுந்து சிரிச்சேன். இத்தனைக்கும் எனக்கு "லொள்ளு சபா" ரெம்ப பிடிக்காது.
சிவா சரியான தேர்வு. கதை, திரைக்கதை எல்லாமே சூப்பர். எத்தன நாள் ஆச்சு இப்படி சிரிச்சு? விசு படம் பார்த்தப்போ சிரிச்சது, வடிவேலு-வின் புலிகேசிக்கு சிரிச்சது. கண்டிப்பா நான் இந்தியா வரப்போ என் அப்பா அம்மாவோட இந்த படம் பார்ப்பேன். இப்படி படம் எடுங்களேன் இயக்குனர்களே, வீட்டுல எல்லாரும் ரசிச்சு, படத்த பத்தி ஒரு ரெண்டு மூனு நாள் பேசி, படம் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக வேண்டும். 2010 பத்தி, அஞ்சு வருஷம் கழிச்சு பேசுனா, இந்த படம் அதில் ஒரு பகுதியா இருக்கும். படத்தின் வசனம் எழுதிய நண்பர் வலைப்பக்கம் இதோ.
வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது. பல இடங்களில் படத்த rewind/repeat செய்ய முடிந்தது என் படுக்கையில் உருண்டு புரண்டு வாய் விட்டு சிரித்து, அழுகை வர சிரித்து, என் கன்னட roommates என்னை ஒரு மாதிரியாய் பார்க்கும் அளவுக்கு படத்தை ரசிக்க முடிந்தது.
தமிழ் படம். திகட்டாத நகைச்சுவை.
அடுத்து பார்த்த படம், ஆயிரத்தில் ஒருவன். விமர்சனகளில் பின்னுட்டம் இட்ட பொழுது, நான் இது மாதிரி புது முயற்சிகளை ஆதரிக்கனும்னு சொன்னேன். தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு எண்ணம் இப்போ. படம் எனக்கு புரிஞ்சுது. (அல்லது நான் அப்படி தான் நினைக்கிறேன்௦). அவதாரோட இதை ஒப்பிட முடியாது, ஒப்பிட கூடாது. ஆனால் இது தான் நம்மை உலக சினிமாவுக்கு எடுத்து செல்லும் முயற்சியா? இன்னும் பத்து வருடம் கழித்து இப்படிப்பட்ட சினிமாவை தான் நாம் பார்க்க விரும்புகிறோமா? அன்பே சிவம்,சேது, ரோஜா, மொழி, பாம்பே, இந்தியன் இந்த படங்கள் எல்லாமே என்னை பொறுத்தவரை பல உலக படங்களுடன் அவற்றை ஒப்பிட வைத்தன. அய்யா செல்வா ராகவன், உலக சினிமாவுக்கு கொண்டு செல்றதுன்னா, உடனே படம் முழுக்க கெட்ட வார்த்தையும், 'Skin Show'um இல்லை. உலகம் நம்மட்ட என்ன இருக்குனு பார்க்க விரும்புதே தவிர, அவங்கள மாதிரி படம் எடுக்க சொல்லல. நல்ல கதை இது. இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு திரைகதை எழுதி, தேவை இல்லாத செக்ஸ்ச விட்டுட்டு (சில இடங்களில் தேவைனா சரி, பார்த்திபனை மயக்க செக்ஸ் தேவை தான், ஆனா கார்த்தி கூட தேவையே இல்லாத உரையாடல்களை தவிர்க்கலாம்). உங்க வட்டத்த விட்டு வெளிய வாங்க செல்வா. செக்ஸ் இல்லாம ஒரு படம் எடுங்களேன் ப்ளீஸ்.
வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது. பல இடங்களில் படத்த freeze செய்து secreenshot எடுக்க செய்ய முடிந்தது ஹி ஹி. :)
ஆயிரத்தில் ஒருவன். மிஸ் பண்ணிடிங்களே செல்வா.
கடைசியா பார்த்தது "My Name is Khan".ஹிந்தி படம். ஷாருக்கும், இயக்குனர் கரணும், ரெம்ப தெளிவா யார் மனதையும் புண்படுத்தாமல் அழகாய் சொல்ல வந்த விசயத்த சொல்லிருக்காங்க.
9/11 2001-kku பிறகு அமெரிக்காவில் வாழும் ஒரு முஸ்லிமின் கதை. ஓரே ஒரு வசனத்தை சுற்றி படம் ஓடுகிறது. "My name is khan and I am not a terrorist". ரெம்ப சிக்கலான கதை. ஒரு நுனி தவறினாலும், ஏதாவது ஒரு சமுகம் ஆத்திரம் அடைந்து விடும். "பாம்பே"யின் சாயல் பல இடங்களில். படத்தில் எல்லாருமே அழகாய் நடித்து இருக்கிறார்கள். ஷாருக் நடிப்பு தனியாய் பாராட்டப்பட வேண்டியது. படத்தோட அஸ்திவாரமே கதை தான்.அதனால அத பத்தி நான் பேச மாட்டேன். பின்னணி இசை பிரமாதம். கேமரா உண்மையான அமெரிக்காவை கவர் செய்து இருக்கு. ஒபமாவாய் நடித்தவர் அவரை நல்லாவே இமிட்டே செய்றார். போர் அடிக்காத திரைக்கதை, நம்ம தமிழ் ஆளுங்க நிறைய பேர் இந்த படத்துல இருந்து நிறைய கத்துக்கலாம். பதிவர்களே, நம்ம பர்தா பற்றிய விவாதம் எல்லாம் படத்துல வருது. இந்த படம் கண்டிப்பாய் எல்லாரும் பார்க்க வேண்டிய ஒன்று.
படம் பார்த்த உடன, நான் போட்ட டுவிட் இது:
@iamsrk @kjohar25 #MNIK.vry gd movie.cant come out of movie, hrs after seeing it.I am Senthil and i am proud to have friends with name 'Khan'
My Name is Khan. Don't ever miss it, especially if your name is not Khan.:) அப்புறம் நீங்க இந்த படம் பத்தி என்ன சொல்ல்றாங்கனு கேட்க ஆர்வம்மா இருக்கேன். யாராவாது படம் பார்த்து இருந்தா உங்க கருத்த சொல்லுங்களேன்.
வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது அப்படின்னு சொல்ல மாட்டேன். இந்த படத்த நான் தியேட்டர்ல பார்த்து இருக்கனும். மிஸ் பண்ணிட்டேன். :(