Tuesday 12 January, 2010

படித்ததில் (வலை மேய்ந்ததில்) பிடித்தது 12-Jan-2010

கூகிள் தனது புது தொலை பேசியை அறிமுக படுத்தியது. "நெக்ஸ்சஸ் ஒன்" என்று பெயரிடப்பட்ட இந்த தொலைபேசி கூகிள் நிறுவனத்துக்கு மிகவும் முக்கிய படி. முதல் முறையாக ஒரு சாப்ட்வேர் இல்லாத பொருளை தனது வலைத்தளம் முலம் விற்பனை செய்கிறது. நீங்களே பாருங்களேன். கூகிள் முதல் பக்கத்தில் நெக்ஸ்சஸ் ஒன் விளம்பரம்.


H.T.C தயாரித்து வந்திருக்கும் இந்த தொலைபேசி வெளி மார்க்கட்டில் 530 dollars (Around 25k) விற்கப்படுகிறது. முதல் சில நாட்களில் உபயோகித்தவர்கள் கூகிள் நுகர்வோர் சேவை பற்றி பல புகார்கள் கூறுகிறார்கள். கூகிள் இது வரை இலவசமாக அளித்த சேவைகளுக்கு என்ன மாதிரி நுகர்வோர் சேவை அளித்ததோ, அதே அளவு தான் இதற்கும் சேவை அளிக்கிறதாம்.  என்ன தான் பெரிய நிறுவனம் என்றாலும் புதிதாய் தொழில் தொடங்கும் பொழுது இந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் போலும். நான் கூகுளின் பரம விசிறி. என்னவே கூடிய சிக்கிரம் அவர்கள் இதை எல்லாம் சரி செய்து வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
---


"விண்ணைத்தாண்டி வருவாயா" பாட்டு கேட்டேன். அருமையான இசை. ஹ்ம்ம் சும்மாவா ஆஸ்கார் குடுத்தாங்க?
---


இன்னொரு TED சுட்டி. கார்த்திக் ஒரு சமூகத்தையே அதன் தொழிலில் இருந்து வெளிகொணர்ந்து புது வாழ்க்கை அமைத்து தரமுடிந்ததை விளக்குகிறார்.
http://www.ted.com/talks/kartick_satyanarayan_how_we_rescued_the_dancing_bears.html
---


திருநெல்வேலி சம்பவம். மனதை ரெம்பவே பாதித்தது. நம் முன் போகும் உயிரை விட நமக்கு பிற விஷயங்கள் முக்கியமாகிவிட்டது. கடவுளே  இந்தியாவை காப்பாற்று!!
---

புத்தக கண்காட்சி போய்வந்தது பற்றிய இடுகைகள் பதிவுலகம் முழுக்க.  ஹ்ம்ம்..பொறாமையாய் இருந்தது. பொழச்சு போங்க மக்கா...அடுத்த வருஷம் நாங்களும் அங்க இருப்போம்ல...
---

இந்த சின்ன பெண்ணின் துணிச்சலை பாருங்களேன். 'நற் குடி' இடுகைகளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மக்கா...ஹி..ஹி..தெளிவா முதலே சொல்லிறது நல்லது இல்லையா?
http://amanpour.blogs.cnn.com/2010/01/09/short-film-life-for-yemeni-girl/

 எல்லாருக்கும் .பொங்கல் நல்வாழ்த்துகள்..



அவ்ளோ தான் மக்கா...அப்புறம் பார்போம்..

2 comments:

Thenammai Lakshmanan said...

பொங்கல் வாழ்த்துக்கள் செந்தில் நாதன்

செந்தில் நாதன் Senthil Nathan said...

நன்றி தேனம்மை!!