Sunday, 6 May 2012

ஆமீர் சார் வாழ்க

அட யார்ரா இவன், எங்க இருந்துடா பதிவு பக்கம் வந்தான்னு கேக்குறது புரியுது. ஒரு எதிர்வினை. பதிவுக்கு எதிர்வினை என்பதால் பதிவாவே போட்டுவிட முடிவு. அப்பத்தான் நமக்கு இந்தபக்கம் ஒரு கடை இருக்குன்னு ஞாபகம் வந்துச்சு. 

சரி மேட்டருக்கு வருவோம். http://www.karkibava.com/2012/05/blog-post.html  இந்த "அமிர் சார் வாழ்க", பதிவுக்குத்தான் பதில். கார்க்கி ரெம்ப பிரபல பதிவர். எழுத்தில் திறமைசாலி. நமக்கு அவ்ளோ எல்லாம் எழுதத்தெரியாது. (என்ன தான் தெரியும்ன்னு கேக்க கூடாது). அதனால் எனக்குத் தெரிந்ததை கொட்டி இருக்கிறேன். அதை படிக்கலைன்னா, ஒரு எட்டுப் போய் படிச்சுட்டு வந்துடுங்க.

இது புது கான்செப்ட்ன்னு யாரு சொன்னா? அதரப்பழசு தான்.  Oprah Winfrey  செய்யாததா. கிட்டத்தட்ட விசு/டி.ஆர் இங்க பண்றது தான். கொஞ்சம் பழைய format தான். அதை மாற்றி அமிர் செய்து இருக்கலாம் என்ற ஆதங்கம் எல்லாருக்கும் உண்டு. இனி வரும் நிகழ்ச்சிகளில் மாற்றுவார் என்று நம்புவோம். அதை அவர் செய்யாவிட்டாலும், அது ஒரு முயற்சியை செயல்படுத்துவத்தில் உள்ள குறைபாடாகத் தான் பார்க்கப்பட வேண்டுமே, தவிர முயற்சியே தப்பு என்றோ, இது வெறும் ஒரு பணம் சம்பாதிக்கும் வழி என்பது சரியாப் படல. நிகழ்ச்சி பற்றிய சில குற்றச்சாட்டுக்களும், அது பற்றிய என் கருத்துக்களும்:

1. அமிர் தனது brand imagai வளர்க்கத்தான் இதை செய்கிறார்: இருக்கலாம். இருக்கட்டுமே. என்ன பிரச்சினை இதில்? அவர் புத்திசாலியாக காட்டிக்கொண்டு , தவறான தகவல்கள் தந்தால் அதில் உள்ள பிரச்னையை புரிந்துகொள்ளலாம். ஆனால் முதல் நிகழ்ச்சியில், தகவல்கள் தவறாய் ஒன்றும் இல்லை. How one wants to show their image is their own choice. Masala movies have all stupid things in world and we just say that they are "masala" and don't read into them. Sameway, Amir has his right to show as different from your regular masalawalas. இந்த பணத்தை அவர் மிக எளிதாக  வேறு ஏதேனும் ஒரு நிகழ்ச்சி செய்து  சம்பாதிக்க முடியுமே? 

2. Reliance/Airtel sponsor: இது பற்றி நிறைய விவாதிக்கலாம். I see this as a compromise that he does for getting the bigger picture seen. இன்று நிறுவனங்கள் தான் நம்மை ஆளுகின்றன.   வினவின் கருத்தாழம் மிக்க கட்டுரைகள் நம்மால் எத்தனை பேரால் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. ஒரு சமூகமாக நாம் அனைவருமே ஒரு வலதுசாரி வாழ்க்கைமுறையை சரி என்று ஒத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். (பிடித்தோ பிடிக்காமலோ). எனவே இனி வரும் சமூக மாற்றங்களில்(மாற்றம், புரட்சி இல்லை) , நிறுவனங்கள் பங்கு இருக்கும். 

3. அமீர் தான் தெரிந்தார், நிகழ்ச்சி தெரியவில்லை. ஒரே வார்த்தை தான். 

Beauty is in the eye of the beholder 



4. // இந்த நிகழ்ச்சி நிச்சயம் அமீர்கானை அறிவாளியாக, பொறுப்புணர்ச்சி மிக்கவராக மக்கள் இடையே அழகாய் இன்னும் ஆழமாய் நிறுவும். அதை தாண்டி எதுவும் செய்யுமென்ற நம்பிக்கை எனக்கில்லை. காரணம் அந்த எண்ணமே அவர்களிடத்திலே இல்லை. // இதற்கான பதில் உங்களுக்கும் எனக்கும் என்றுமே தெரியாது, கார்க்கி. 

பல நேரங்களில், ஒரு சில விஷயங்கள் தப்பு என்ற உணர்வே இல்லாமல், நாம் வாழ்கிறோம். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ஒரு சமூக அளவில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு சின்ன நம்பிக்கை. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ROI கிடையாது. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் செய்வது. அவ்ளோ தான். 

ஆமீர் சார் வாழ்க

3 comments:

x said...

repeat

//அது விஷம் என்ற பாட்டிலில் இருக்கும் விஷம். இது மருந்து என்ற பாட்டிலில் இருக்கும் விஷம். அவ்வளவுதான் விஷயம்//

கார்க்கிபவா said...

1) புது கான்செப்ட் இல்லைன்யென்பதை குறையாக மட்டும் சொல்ல எண்ணவில்லை. படிப்பதில் சிலருக்கு அது என்ன மாதிரியான நிகழ்ச்சி என்பது தெரியாமல் இருக்குமில்லையா? அதனால்தான்.

2) இது பணம் சம்பாதிக்கும் வழி என்றும் நான் சொலல்வில்லை. அதை முக்கியமான பிரச்சினையாகவும் சொல்லவில்லை.

//இந்த பணத்தை அவர் மிக எளிதாக வேறு ஏதேனும் ஒரு நிகழ்ச்சி செய்து சம்பாதிக்க முடியுமே?//

அதற்கான காரணத்தை பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறேன். உங்களுக்காக
”அமீருக்கு ஷாரூக் போல சல்மான் போல ஜாலி இமேஜ் இல்லை. அவர் அறிவாளி எதை செய்தாலும் ஒரு பொறுப்புணர்வு இருக்கும் என்றாகத்தான் இருக்கிறது அவர் இமேஜ். . அவர் எப்படி “கோன் பனேகா க்ரோர்பதி” செய்ய முடியும்? அவரால் சத்யமேவ ஜயதேதான் செய்ய முடியும். ”


3) //அமிர் தனது brand imagai வளர்க்கத்தான் இதை செய்கிறார்: இருக்கலாம். இருக்கட்டுமே//

இதுதான் என் முக்கிய பிரச்சினை. இதை நீங்கள் எளிதில் எடுத்து கொண்டீர்கள். என்னால் முடியவில்லை. அதற்கு அவர் எடுத்துக் கொண்டு விஷயம் மோசமான தேர்வு. இதற்கு பதிலாக 1000 பேருக்கு தையல் மிஷன் தருவதே சால சிறந்தது

4) //Reliance/Airtel sponsor:// இதுவும் இன்னொரு ஏமாற்றமாக தான் பார்க்கிறேன். முக்கிய பிரச்சினை இதுவல்ல. இவ்வளவு காஸ்டிலியாக நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்ய முன்வர்க்கூடிய எல்லா நிறுவனக்களுமே மோசடியாகத்தான் இருக்க முடியும். அதுவும் ஒரு ஆதங்கம்.அவ்வளவே

5) //அமீர் தான் தெரிந்தார், நிகழ்ச்சி தெரியவில்லை. ஒரே வார்த்தை தான். Beauty is in the eye of the beholder //

என் பதிவை வாசித்த நண்பர் ஒரு வர் அழைத்தார்.. நிகழ்ச்சியை பார்க்கும் முன்னர் எனக்கும் உங்களை மாதிரியே ஒரு ஆசை இருந்தது. ஒரே ஒரு நிகழ்ச்சி சமூக மாற்றத்தை உண்டு பண்ணுவது ரொம்ப கஷ்டம். ஆனால் அதற்கான சரியான துவக்கத்தை அமீர் செய்வார் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. அது நடக்காமல் போன ஏக்கம் தான் பதிவு என சொன்னார் அவர். அவருக்கு தெரிந்த விஷயம் உமக்கு தெரியாமல் போனதற்கும் அதே அந்த 8 வார்த்தை ஆங்கில வாக்கியம் காரணமாய் இருந்திருக்கலாம்


ப்ரிட்டோ கேட்டது போல என் பதிவில் முக்கிய பிரச்சினையாக நான் சொல வந்த எதையும் நீங்கள் கேட்கவில்லை. விரிவாக எழுதியிருக்க வேண்டிய விஷயத்தை அவசரத்தில் எழுதி நானும் ஆமீர் போலவே சொதப்பியதை உணர்கிறேன்.

நன்றி :)

srujana said...

Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions. Earn points for referring your friends and exchange your points for cool gifts.