Sunday 28 March, 2010

"சென்னை இணைய எழுத்தாளர்?" சந்திப்பு!!

என்னடா இவன் தான் சென்னைல இல்லையே..ஆனா இதபத்தி பதிவு போடறான்னு நீங்க முனுமுனுக்குறது நல்லாவே கேக்குது. ஆனா பாருங்க, நமக்கு எப்பவுமே இந்த மாதிரி விஷயங்கள்ல ஈடுபாடு ஜாஸ்தி. அதான் நம்ம கருத்த பதிஞ்சுருவோம்னு..டோண்டு பதிவுல என்ன விவாதிக்கபட்டதுன்னு தெளிவா சொல்லி இருக்கார். சிவராமன் பதிவையும் படிங்க. 


சென்னை இணைய எழுத்தாளர்கள் சங்கம், இல்ல குழுமம், இல்ல சமுதாயம், அட பேரு வைக்கிறதே கஷ்டமா இருக்கும் போல. லக்கி  சொன்ன மாதிரி, என்னை எல்லாம் எழுத்தாளர்னு யாராவது கூப்பிட்டா, அப்புறம் தமிழ்ல இன்னொரு புது வார்த்தை கண்டுபிடிக்கணும், உண்மையான எழுத்தாளர்களை அழைக்க. :-) நமக்கு தமிழ் அகராதில சேர்க்க பல அறிவியல் சொற்கள் இருப்பதால, இந்த வேலை நமக்கு வேண்டாமே. 


பேர பத்தி நா பேசுறதே தப்பு. ஏன்னா, நான் இப்படி ஒரு சங்கம் வேணுமான்னு கேக்குற குழுவை சேர்ந்தவன். சரி ஒரு நிமிஷம் வேணும்னு வச்சுக்குவோம்...நன்மைகள்/தீமைகள் என்ன?


ஒரு குழுவிற்கு எப்பவுமே தனி மரியாதை உண்டு. தனி மனிதர்கள் சாதிக்க முடியாத பல விஷயங்கள் குழுக்களால் சாதிக்கப்பட்டு இருக்கு. ஆனால் அந்த குழுக்களுக்கு எல்லாம் ஒரு பொது நோக்கம், பொது பிரச்சனை இருந்தன. ஒரு கிராமத்திற்கு தண்ணீர் வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இலங்கை தமிழர்கள் சுதந்திரமாய் சுவாசிக்க வேண்டும் என்பது வரை. நம் குழுவில் அப்படி என்ன பிரச்சனை இருக்கு? (பல வகைகளில் வேறுபடும் நம் எல்லாரையும் ஒன்றாய் கட்டி போடும் அளவு?)



          அ. டோண்டு/சுகுணா திவாகர் சந்தித்த மாதிரி போலிகள் தொல்லை. 
                            இது பெரிய பிரச்சனை தான். ஆனால் இதில் உதவ சைபர் கிரைம் காவலர்கள் தான் ரெம்ப முக்கியம் என்பது என் எண்ணம். ஒரு தனி மனிதனின் கோரிக்கைக்கும் ஒரு சங்கத்தின் கோரிக்கைக்கும் வித்தியாசம் இருக்குமா என்று தெரியவில்லை. 
          ஆ. பயிற்சிகள்/போட்டிகள்/தொழில்நுட்ப உதவிகள்:
                       ஒரு சங்கம் இவற்றை எடுத்து நடத்தும் போது, வரவேற்ப்பு பெரிதாக இருக்கும். ஆனால் இதில் கருத்து வேறுபாடுகளும், அதனால் நமக்குள்  பிரச்சனைகளும் வர ஆரம்பிக்கும். ஒரு கவிதை போட்டியில் என் ஆதர்ஷ எழுத்தாளர் நடுவர் ஆக வேண்டும் என்பதில் ஆரம்பித்து, "கவிதை போட்டியின் பரிசு சிறுகதை போட்டியின் பரிசை விட அதிகம்", "பரிசு கவிதைகள் எல்லாம் பின்நவினத்துவ கவிதைகள்" என்பது வரை பல குற்றசாட்டுகள் வரும். தனியாய் இவற்றை நடத்தும் போது, அது அவர்கள் பணம், அவர்கள் எது செய்தாலும் கேட்க நமக்கு உரிமை இல்லை. ஆனால் சங்கம் பொது. நேற்று அமைப்பில் சேர்ந்து, இன்னும் நம் நோக்கங்களை புரிந்து கொள்ளாத ஒருவர், உறுப்பினர் என்ற உரிமையில் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கேள்வி கேட்க முடியும்.
       இ. சங்க நிர்வாகம்:
               பணமும், பதவியும் தான் மனிதர்களை பொறாமை கொள்ள செய்யும் செயலில் முன்னிலை பெறுபவை. பதிவர்களும் மனிதர்கள் தானே? சங்க தேர்தல்கள், செலவினங்கள் பல கேள்விகளை எழுப்பும். சங்க நிகழ்ச்சிகளுக்கு ஓடியாடி வேலை செய்பவர்கள், தங்களுக்கு பிடித்த வகையில் அந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்தால் கூட பலர் அதனை கேலி/கேள்வி செய்வார்கள். "ஒரு சல்லி காசு வாங்காம, நான் ஏன் இத்தனை வேலை செய்ய வேண்டும் என்று உண்மையாய் உழைப்பவர்கள் என்னும் பொழுது,  பதவி ஆசை பிடித்த குழு நிர்வாக பொறுபேற்கும். அப்புறம் விழுப்புரம் தான்... :-)
     ஈ. பதிவுலகம் இன்னும் சில வருடங்களில் லட்சம் பேர் வாழும் வலை இடம் ஆக போகிறது. இத்தனை பேரை நாம் எப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வர போகிறோம். ஒரு சின்ன ஹாலில்  நடந்த கூட்டத்தில் நமக்குள் பல கருத்து வேறுபாடுகள்.  இந்த முயற்சி தமிழர்கள் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது போல. திமுகவும் அதிமுகவும் மதிமுகவும் ஒரு தலைவரை ஏற்று கொள்வது போல. 
உ.  பலர் தாங்கள்  சென்னையில் இல்லை, ஆனால் அவர்கள் பணத்தில் பயிலரங்கு நடக்கிறது மாதிரியான பல வினாக்கள் வரும். 


நான் எதோ இது நடக்கவே முடியாத விஷயம் என்று சொல்வதாக எண்ண வேண்டாம். "நானும் ரவுடி" என்று சொல்லிக்கொள்வதில் எனக்கும் பெருமை தான். என் கருத்துகள் இதோ:


            மின்னச்சல் குழுமமாக நாம் இருக்கலாம். எல்லாரிடமும் பணம் கேட்காமல், தருபவர் தரட்டும் என்ற கொள்கையுடன், வரும் பணத்தில் நம்மின் மிக அத்தியாவசிய தேவையான, அனானிகளை களைவது மாதிரியான செயல்களை மட்டும் செய்வோம். (ஓர் அளவுக்கு மேல் பணம் வந்தால், அதை மறுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்). போட்டிகளோ, பயிற்சிகளோ இதன் மூலம் வேண்டாம். உதவிகள் சங்கம் மூலம் வேண்டாம். சங்க மின்னச்சல் மூலம் உதவி கோரலாம். ஆனால் உதவில் தனிப்பட்ட முறையிலயே செய்யப்பட வேண்டும். நம்முடைய நோக்கங்களை மிகவும் குறைவாக வைத்து கொள்வதினால், நிறைய பேரை குழுமத்தில் இணைக்க முடியும். பதிவர் அல்லாத வாசகர்களை கூட இதில் இணைய வாய்ப்புண்டு  நிர்வாகிகள் என்று ஒரு குழு தேவை இல்லை. பதவி இல்லை. பணம் இல்லை. போட்டியோ பொறமையோ இருக்காது. நாம் எல்லாரும் ஒரு குழுவில் பதிவு செய்து இருப்போம், ஆனால் அந்த குழு நமக்கு மிகவும் அத்தியாவசிய உதவிகளை மட்டுமே செய்யும். பிடிக்காதவர்கள் கூட "ஊரோடு ஒத்து வாழ" குழுவில்  சேருவார்கள். 


எல்லாமே என் கருத்துக்கள். நான் பதிவு எழுதவதே அபூர்வம். எனவே எனக்கு இதை பற்றி பேச எவ்வுளவு தகுதி இருக்குனு தெரியாது. புடிச்சா எடுத்துக்கோங்க, இல்லாட்டி யாருக்கும் நஷ்டம் இல்ல. 


Very less we try to accomplish, more people will agree to it!! 

18 comments:

TBCD said...

பாரேன் ! இந்தப் பையனுக்குள்ளேயும் ஏதோ ஒண்ணு இருந்திருக்கு :-)

ராம்ஜி_யாஹூ said...

Though you are humble, your points/opinions are highly valuable and relevant.

புருனோ Bruno said...

தெளிவாக சிந்தித்துள்ளீர்கள்

சிந்திக்க வைக்கிறீர்கள்

வெட்டிப்பயல் said...

நல்ல பதிவு செந்தில்.

//ஒரு தனி மனிதனின் கோரிக்கைக்கும் ஒரு சங்கத்தின் கோரிக்கைக்கும் வித்தியாசம் இருக்குமா என்று தெரியவில்லை. //

நிச்சயம் இருக்கும்.

ஆனால் அதை மட்டுமே காரணமாக வைத்து சில பல நாட்டாமைகளை உருவாக்கத் தேவையில்லை.

செந்தில் நாதன் Senthil Nathan said...

நன்றி டிபிசிடி!!

நன்றி ராம்ஜி!!

நன்றி டாக்டர்!!

நான் எழுதிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு சின்னப்புள்ளதனமா உளறிடேன்னு நெனச்சேன். ஏன்னா இந்த வட்டத்துக்குள்ள நான் வந்து ஒரு வருஷம் தான் ஆச்சு. இன்னும் இங்கு நடக்கும் பல நுண்ணரசியல்கள் புரியாதவனாய் தான் இருக்கிறேன்.

உங்கள் பின்னூட்டங்கள் நான் சிந்தித்த கருத்துக்கள் ஒரு அளவுக்காவது யோசிக்கப்பட வேண்டியவை என்பதை தெளிவுபடுத்தின. நன்றி!!

வோட்டு போட்ட நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!!

Paleo God said...

அருமையான கருத்துகள் நண்பரே. இது அறிவிப்பு வந்த ஆரம்ப நிலையிலேயே இவ்வாறு பதிவிலேயோ, பின்னூட்டம் மூலமாகவோ விவாதிக்கப்பட்டிருப்பின், ஆரோக்கியமானதாக இருந்திருக்கும் என்பதே என் கருத்து.

நன்றி.

செந்தில் நாதன் Senthil Nathan said...

நன்றி பாலாஜி!!

நன்றி ஷங்கர்!! எனக்கு முதல என்ன நடக்குதுனு புரியல..கூட்டம் பற்றி டோண்டு/சிவராமன்/டிவிஆர்/உங்க பதிவுகள படிச்ச பிறகு தான் ஏதோ புரிஞ்சுது.

செந்தில் நாதன் Senthil Nathan said...

Congrats!

Your story titled '"சென்னை இணைய எழுத்தாளர்?" சந்திப்பு!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 29th March 2010 03:14:01 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/213133

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி நண்பர்களே!!

எல் கே said...

@senthil

inniku itha pathti nan post panlamnnu irunthen. neenga mundikittenga.. paravaillai. naan enna ninachano athethan neengalum kettu irukeenga.. also when u become a part of a association we cant work independently

- யெஸ்.பாலபாரதி said...

:)

குட் ஒன்!

Romeoboy said...

பதிவு அருமையாக எழுதி உள்ளீர்கள் ..

சென்ஷி said...

அருமையான பதிவு செந்தில்..

Vidhoosh said...

நன்றாக எழுதி இருக்கீங்க. நல்ல கருத்துக்கள். :)

கபீஷ் said...

ரிப்பீட்டிங்க் விதூஷ்

செந்தில் நாதன் Senthil Nathan said...

நன்றி LK!!
நன்றி பாலபாரதி!!
நன்றி ரோமியோ!!
நன்றி சென்ஷி!!
நன்றி விதூஷ்!!
நன்றி கபிஷ்!!

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு செந்தில்நாதன் சங்கர் சொன்ன மாதிரி நீங்க முன்பே இது பற்றி எழுதி இருக்கலாம்

வெண்பூ said...

சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்

செந்தில் நாதன் Senthil Nathan said...

நன்றி அக்கா!! ஆனா முன்பே சொன்ன மாதிரி எனக்கும் இப்ப தான் எதோ புரியுது. :-)

நல்ல இடுகை வெண்பூ!!