Thursday, 8 April 2010

ஐபோனில் தமிழ்!!

ஐபோன் பயன்படுத்தி இருந்தீர்கள் என்றால், அதில் தமிழ் வாசிப்பது மிகவும் கடினம் (பிச்சு போட்ட ஜிலேபி மாதிரி) என்பது உங்களுக்கு தெரியும். இது வரை அதற்கு இருக்கும் ஒரே பதில் செல்லினம் என்னும் ஐபோன் மென்பொருள் மட்டுமே.


படம் உதவி: http://sellinam.com/


சரி!! செல்லினத்தில் தான் தமிழ் படிக்க முடியுமே அப்புறம் எதற்கு இந்த பதிவு என்று யோசிக்கிறிங்க போல? பொறுமை. பொறுமை இணையத்தினும்  பெரிது. :-)

செல்லினத்தில் ஒரு வலைதளத்தை படிக்க, அந்த தளத்தின் RSS ஓடையை கொடுக்க வேண்டும்.

உங்கள் வலைத்தளம் ப்ளொக்கரில் இருந்தால், உங்கள் RSS ஓடை
http://blogname.blogspot.com/feeds/posts/default?alt=rss
blogname என்பதற்கு பதில் உங்கள் வலைதள முகவரி இருக்க வேண்டும்.

இப்படி நீங்கள் வாசிக்கும் எல்லா வலைதலங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக இதில் இணைத்து வாசிக்கலாம். 


ஆனால் என்னை மாதிரி பல வலைப்பூக்களை தொடர்பவர்கள், ஒன்றன் பின் ஒன்றாக எல்லாவறையும் இணைத்து, அப்புறம் புதிதாக ஏதாவது பதிவு வந்திருக்கான்னு நொடிக்கு ஒரு தடவ பார்த்துகிட்டு, நடக்குற காரியமா? அதனால் பல நாட்கள் இந்த மென்பொருளை நான் உபயோகபடுத்தவில்லை. அப்புறம் ஒரு நாள் நானே உக்கார்ந்து யோசிச்சேன். என் "கூகிள் ரீடர்" நான் தொடரும் வலைப்பூக்களில் வரும் புதிய பதிவுகளை தொகுத்து தருகிறது. அப்படி என்றால் என் "கூகிள் ரீடர்"யின் வெளியிடை ஒரு RSS ஓடையாக  கொண்டு வர முடியும் எனில், அந்த ஒரு RSS ஓடையை மட்டும் செல்லினத்தில் இணைத்து விட்டால் போதும், நான் தொடரும் அத்தனை தளங்களும் செல்லினத்தில். :-)

It will be a mobile version of my google reader. :-)

சொல்வது எளிது. ஆனால் செயல்பட ஆரம்பித்த பின் தான் அதில் உள்ள கடினங்கள் புரிந்தன.

முதலில் "கூகிள் ரீடர்"யின் வெளியிடை ஓடையாக மாற்றுவது எப்படி?

இதற்க்கு நீங்கள் முதலில் நீங்கள் வாசிக்க நினைக்கும் வலைத்தளங்களை ஒரு மூட்டையாக கட்ட வேண்டும். கிழே உள்ள படத்தை பாருங்கள்.

இதில் உள்ள "create a bundle" என்பதை தேர்தெடுத்து மூட்டை கட்டுங்கள். பின் அந்த மூட்டை ஒரு கோப்பாக வரும். அந்த கோப்பை தேர்ந்தெடுத்து விட்டு, வலது பக்கம் மேலே "show details" சுட்டியை சொடுக்கினால், கீழ் உள்ள படத்தில் உள்ள படி உங்கள் "ATOM FEED" தெரியும். இது 'atom' ஊட்டம், இதை RSS-ஆக மாற்றினால் தான் செல்லினத்தில் படிக்க முடியும்.



எனவே உங்கள் atom ஊட்டத்தை நகல் எடுத்து கொண்டு, www.feedburner.com சென்று உங்கள் கூகிள் கணக்கின் முலமாக உள்சென்று, மேலே நகல் எடுத்த சுட்டியை ஓட்டினால், ஒரு சில கேள்விகளுக்கு பின், அது உங்களுக்கு ஒரு புது சுட்டி தரும்.




மேலே உள்ள "Feed Address"சை நகல் எடுத்து உங்கள் கைபேசியில் செல்லினத்தில் சென்று புது உட்டமாக கொடுத்து விட்டால், பின் உங்கள் பதிவுகள் அனைத்தும் அழகு தமிழில் உடைந்த ஜிலேபிகளாக இல்லாமல் படிக்கலாம்.

நான் கூறியதில் ஏதேனும் விடுபட்டு போயிருப்பின் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும். ஏதேனும் புரியவில்லை என்றாலும் பின்னுட்டத்தில் கேளுங்கள்.

நான் தொடரும் தளங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், http://feeds.feedburner.com/senthilfollows சுட்டியை உபயோகித்து கொள்ளுங்கள்.

இன்னொரு உதவி. கீழ் உள்ள ஆப்பிள் தளத்திற்கு சென்று தமிழ் சரியாய் தெரியவில்லை, என்ற குறையை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
http://www.apple.com/feedback/iphone.html

8 comments:

கோவி.கண்ணன் said...

இது நானும் முயற்சித்தேன் படிக்கப் போகும் ஒவொன்றின் RSS Feed சேர்க்கனும், இந்த முறை தற்காலிக தீர்வு மட்டுமே. நமக்கு வேண்டியது அனைத்து தமிழ் பதிவுகளையும் உலாவியில் (ப்ரவுசரில்) படிக்கும் வசதி.

கோவி.கண்ணன் said...

ஐபோனில் பிடிஎப் தமிழ் கோப்புகளை அப்படியே திறந்து படிக்கலாம். உடைந்து தெரியாது.

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு நன்றி செந்தில் நாதன்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

செந்தில் நாதன் Senthil Nathan said...

நன்றி கண்ணன்!!

// நமக்கு வேண்டியது அனைத்து தமிழ் பதிவுகளையும் உலாவியில் (ப்ரவுசரில்) படிக்கும் வசதி.
//
ஆமாம். ஆனால் இது அதுவரை உதவுவதற்காக ஐடியா. ஆப்பிள் அண்ணன் கண்ண தொறந்து அருள் புரிஞ்சா நல்லா இருக்கும்.

நன்றி தேனம்மை!!

நா. கணேசன் said...

And now, use Apple opera mini:
http://yasavi.blogspot.com/2010/04/iphone.html

http://m10lmac.blogspot.com/2010/05/viewing-hindi-tamil-bengali-websites.html

Hope this helps.


N. Ganesan

நா. கணேசன் said...

http://m10lmac.blogspot.com/2010/05/viewing-hindi-tamil-bengali-websites.html